Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
இலங்கை உட்பட 5 நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பினராக தகுதியற்றவையென நிராகரிக்க வேண்டும்
[08 - May - 2008] [Font Size - A - A - A]
*இரு சர்வதேச கண்காணிப்பு அமைப்புகள் வலியுறுத்தல்

ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவை உறுப்புரிமைக்காக கடும் பிரயத்தனம் செய்து வரும் இலங்கை, பாகிஸ்தான், பஹ்ரெய்ன், காபொன், சம்பியா ஆகிய நாடுகள் மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாக்க தவறிவிட்டதாகவும் இந்நாடுகளை உறுப்புரிமை பெறுவதற்கு தகுதியற்றவையென நிராகரித்து விடுமாறும் உரிமைகளுக்கான இரு கண்காணிப்பு அமைப்புகள் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளன.

ஆனால் காபொன், சம்பியா நாடுகளுக்கு ஆசனங்கள் கிடைப்பது உத்தரவாதப்பட்டிருப்பதாகவும் ஏனெனில் அந்நாடுகளுக்கான உறுப்புரிமையை பிராந்திய குழுக்களும் ஆபிரிக்காவும் போட்டியின்றி தேர்ந்தெடுப்பதாகவும் அதனால் எதிர் வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில் இந்த இரு நாடுகளின் உறுப்புரிமையும் உத்தரவாதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சுதந்திர இல்லம்(freedam house)மற்றும் ஐ.நா.கண்காணிப்பகம்(un watch)என்ற இரு மனித உரிமை அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன.

பேரவையின் ஆசனங்களைப் பெறுவதற்கான போட்டியில் ஆபிரிக்காவிலும் வேறு இடங்களிலுமுள்ள ஐனநாயக நாடுகள் தோல்வியைத் தழுவியுள்ளதாக ஐ.நா.கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றிலல் நியூயர் விமர்சித்திருக்கிறார்.

தமது சொந்தப் பிரஜைகளின் மனித உரிமைகளை கிரமமாக மீறி வரும் அடக்கு முறை அரசாங்கங்களுக்கு சர்வதேசரீதியான நன் மதிப்பை பெற்றுக்கொடுக்கும் நாடுகளாக இந்த நாடுகள் உருவாகி விடுமெனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

சுதந்திர இல்லமானது நியூயோர்க்கை தளமாகக் கொண்டு இயங்கிவருவதுடன், உலகளாவிய ரீதியில் சுதந்திரமான கருத்துகளை மேம்படுத்தப்பாடுபட்டு வருகிறது. அதே போன்று ஜெனீவாவை தளமாகக் கொண்டியங்கும் ஐ.நா.கண்காணிப்பகம் சாசனத்தை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா.செயற்படுவதை கண்காணித்து வருகின்றது. உள்நாட்டிலும் ஐ.நா.விலும் மனித உரிமைகளை மேம்படுத்தும் பதிவுகளைக் கொண்ட நாடுகளே மனித உரிமைப் பேரவையிலுள்ள 20 உறுப்பினர்கள் பட்டியலில் இடம் பெறுவதை ஐ.நா. கண்காணிப்பகம மதிப்பீடு செய்து வருகிறது.

ஜெனீவாவை தளமாக கொண்டியங்கும் மனித உரிமைகள் பேரவையானது பிராந்தியக் குழுக்களை உள்ளடக்கியுள்ளது. இக்குழுக்கள் ஆபிரிக்கா, ஆசியாவின் செல்வாக்கிற்கு உட்பட்டவையாகும். ஒவ்வொரு குழுவிலும் 13 நாடுகள் உள்ளன. இவை ஒன்றிணைந்து வாக்களித்தால் 26 வாக்குகள் கிடைக்கும். இதனால் பெரும்பான்மை பலம் கிடைத்துவிடும். மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகியவற்றுக்கு 7 நாடுகளின் பிரதிநிதித்துவம் உள்ளன.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் தற்போது கியூபா, சவுதிஅரேபியா, சீனா, ரஷ்யா ஆகியவையும் உறுப்பினர்களாக உள்ளன. இவற்றின் மனித உரிமைப்பதிவுகள் கடுமையான விமர்சனத்திற்கு இலக்காகியுள்ளன. பாகிஸ்தான், இலங்கை, காபொன், சம்பியா ஆகியவற்றின் மனித உரிமை பதிவுகள் கவலையளிப்பதாக இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

192 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.வின் பொதுச் சபையானது 47உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமை பேரவைக்கு 15 உறுப்பினர்களை தெரிவு செய்யும். மே 21இல் இத் தேர்வு இடம்பெறும். ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா நாடுகளுக்கான உறுப்புரிமைக்கு போட்டியில்லை. ஆசியாவுக்கான ஆசனங்களை பெற்றுக் கொள்ள 6 நாடுகள் போட்டியிடுகின்றன. பஹ்ரெய்ன், கிழக்கு தீமோர், பாகிஸ்தான், ஜப்பான், இலங்கை, தென்கொரியா ஆகியவை போட்டியிடும் ஆசிய நாடுகளாகும்.

Email this page Your Opinion Print this page
பாராளுமன்ற சம்பிரதாயங்களை மறந்தவராக எதிர்க்கட்சித் தலைவர்
பாராளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைப்புக்கு விசேட பின்னணிக் காரணம் எதுவும் இல்லை
தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் முகம் கொடுக்க அஞ்சியே பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு
விமானியின் சாதுர்யத்தால் காப்பாற்றப்பட்ட ரணிலின் உயிர்
மியன்மார் நெருக்கடி; அரிசி கொள்வனவுக்கு தாய்லாந்துடன் இலங்கை பேச்சுவார்த்தை
பிள்ளையானுக்கு ஆதரவாக ஹெலியிலிருந்து துண்டுப் பிரசுரங்கள்
கறுக்காய்குளம் பகுதியில் கவச வாகனம் கண்ணிவெடியில் சிக்கி 9 படையினர் பலி
இலங்கை உட்பட 5 நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பினராக தகுதியற்றவையென நிராகரிக்க வேண்டும்
சர்வாதிகாரத்தை நிலைநாட்ட அரசாங்கம் கடும் முயற்சி
கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசுக்கு எதிராக வாக்களிக்க சகல மக்களும் கிளர்ந்தெழ வேண்டும்
தரம் குறைந்த அரிசியை விற்போரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த பணிப்பு
கட்டைக்காடு கிராமத்தில் இரு தமிழர் , ஒரு முஸ்லிம் கைது
இரத்தினபுரி வைத்தியசாலை தாதிகள் இன்று வேலைநிறுத்தப் போராட்டம்
கிழக்கு தேர்தல் வாக்களிப்புக்கு அரச தனியார் ஊழியர்களுக்கு சம்பளத்துடனான லீவு
இலங்கைக்கு இந்தியா ஆயுதம் வழங்குவதை நியாயப்படுத்துகிறார் விஜயகாந்த்
புத்தளத்தில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் திருமலை அனுப்பப்பட்டதன் மர்மம்
விமல் வீரவன்ச அணியினரின் செய்தியாளர் மாநாட்டில் குழப்பம்
வவுனியா கிளைமோரில் பலியான 2 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன
பாணந்துறை ரயிலில் குண்டுப் புரளி
பொருளியல் துறை பேராசிரியர் இராஜரட்ணம் லண்டனில் காலமானார்
பயணியைத் தாக்கிய நடத்துநர் விளக்கமறியலில்
யாழ்.பல்கலைக்கழக மாணவர் விடுதிக்கு வெளியே நேற்றிரவு கைக்குண்டு வெடிப்பு
தேர்தல் தினத்தில் வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு உத்தரவு
மாடியில் இருந்து யுவதி விழுந்து மரணமான சம்பவம் நீர்கொழும்பு ஆஸ்பத்திரி டாக்டருக்கு பிணை மறுப்பு
சிவனொளிபாதமலை உச்சியில் ஆலயத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
வவுனியாவில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க.வெற்றிபெறுவது உறுதி
தொழிலாளர் வர்க்கத்தை அடிமைப்படுத்தும் கூட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஒன்றுபடுவோம்
வெற்றி பெற்றாலும் தோல்வியை தழுவினாலும் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வே எனது ஒரே நிலைப்பாடு
சிங்கள மக்கள் தமிழர்களின் நண்பர்கள் இந்நாட்டின் அரசியல் யாப்பே எமது எதிரி
யாழ்.மாவட்ட சபை தேர்தல் மோசடியே தமிழ் இளைஞர் ஆயுதம் ஏந்தக் காரணம்
ஆயுதம் வைத்திருப்பதாக பிள்ளையானே கூறும் போது அரசு மட்டும் மறுப்பது ஏன்?
பிள்ளையான் குழுவின் ஆயுதங்களை களைந்து மக்களை பாதுகாப்பது அவசியம்
யாவுமே பௌத்தர்களின் இடமென்பதே ஹெலஉறுமய தேரர்களின் சித்தாந்தம்
3200 மில்லியன் ரூபா கடன் பளுவால் மிகின் விமான சேவை இடைநிறுத்தம்
இராணுவத்தின் பாரிய இழப்புகளுக்கு அரசியல் கலந்திருப்பதே காரணம்
ஆளும் கட்சியிலிருந்து ஐ.தே.க.வில் இணைந்தார்
பிரிட்டனுக்கான புதிய சங்கநாயக்கவிற்கு அலரிமாளிகையில் ஜனாதிபதி கௌரவிப்பு
சூறாவளியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மியன்மார் மக்களுக்கு இலங்கை அனுதாபம்
தேர்தலின் பின் பொருட்கள் விலை மேலும் மோசமாக அதிகரிக்கும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com