கொழும்பு துறைமுகத்தின் பாதுகாப்பை சீராக முன்னெடுக்கும் நோக்கில் வெடிமருந்துகளை இனங்காணவென பயிற்சியளிக்கப்பட்ட ஐந்து மோப்ப நாய்களை துறைமுக பொலிஸ் பிரிவிடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த 5ஆம் திகதி துறைமுக அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா, பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமால் மெதிவகே, பொலிஸ் அத்தியட்சர்களான மகிந்த ஏக்க நாயக்க, விக்கிரமசிங்க மற்றும் துறைமுக பொலிஸ் பொறுப்பதிகாரி சமரநாயக்க ஆகியோர் அமைச்சருடன் நாய்களை பார்வையிடுவதையும் சீ.எல்.லால் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருப்பதையும் இங்கு காணலாம்.