சென்னையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்ததை அடுத்து ஆத்திரமடைந்த ரசிகர்கள் குடிநீர் போத்தல்களை மைதானத்தில் வீசினர். இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸிடம், சென்னை சுப்பகிங்ஸ் அணி தோல்வியடைந்தது.
இதனால் ஆத்திரமடைந்த கிரிக்கெட் ரசிகர்கள் காலி குடிநீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்களை மைதானத்தில் வீசினர். சில போத்தல்கள் நடன மங்கைகள் மீதும் வீசப்பட்டன.
இதனால் வேறு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமலிருக்க ரசிகர்களை பொலிஸார் மைதானத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்தால் சேப்பாக்கம் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.