ஓர் அங்காடி கடையில் மலைபோல் குவிந்து கிடந்த மரவள்ளிக்கிழங்கு சற்று நேரத்தில் விற்றுத் தீர்ந்து விட்டது. ஆண்களும் பெண்களுமாக ஏராளமானோர் விழுந்தடித்துக் கொண்டு மரவள்ளிக் கிழங்கை கொள்வனவு செய்தனர்.
அவர்களில் ஒருவரை அணுகி "மரவள்ளிக் கிழங்கிற்கு இப்போது இவ்வளவு மவுசு ஏற்பட்டிருக்கின்றதே" என்று கூறியதும் அவர் சொன்ன பதில் சிந்திக்க வைத்தது.
"இப்போது பாண் விற்கின்ற விலையைப் பார்க்கும் போது மரவள்ளிக்கிழங்கை வாங்குவது மலிவானது மட்டுமல்லாமல் வயிறாரச் சாப்பிடவும் முடியும். அதனால்தான் எனது குடும்பத்திற்குப் போதியளவு கிழங்கை வாங்கிச் செல்கின்றேன்" என்றார்.
உணவுப் பொருட்கள் எங்கு மலிவாகக் கிடைக்கின்றனவோ அங்கெல்லாம் சனக் கூட்டத்தைக் காணமுடிகின்றது.
மலிவு உணவைப் பொறுத்தவரை "நீ எங்கே, நான் அங்கே" என்ற நிலை தான் மக்களுக்கு.!