அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள கதிர்காமம் முருகன் ஆலய திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டு வருகின்றது.
அண்மைக் காலங்களில் இப்பகுதிகளில் இடம்பெற்ற சில சம்பவங்களால் கதிர்காமத்துக்கு பக்தர்களும் உல்லாசப் பயணிகளும் வருவது குறைவடைந்தது.
அத்துடன், இங்குள்ள விடுதிகள், ஹோட்டல்களும் மூடப்பட்டன. கடந்த சித்திரைப் புத்தாண்டு தினத்தில் மீண்டும் இங்கு பூஜைகள் நடைபெறத்தொடங்கியுள்ளது.
கதிர்காமம் பகுதிக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் எதுவித அச்சமும் இன்றி வந்து போகலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி தற்போது அதிகளவு மக்கள் கதிர்காமத்துக்கு வந்து போகின்றனர்.
இதனால், எதிர்வரும் கதிர்காம முருகன் ஆலயத் திரு விழாவை சிறப்பாக நடத்துவதற்கு உயர் மட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வழமைபோல கிழக்கில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் வரும் நிழ்வுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதற்கு முன்னர் கதிர்காமத்தில் உள்ள வீதிகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் அதிகாரிகள் இங்கு வந்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.
கடந்த சித்திரைப் புத்தாண்டு தினத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கதிர்காமத்துக்கு விஜயம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.