Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, May 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தடுத்துவைக்கப்பட்டுள்ள 19 மலையக இளைஞர்களையும் விடுவிக்க ஏற்பாடு
[09 - May - 2008] [Font Size - A - A - A]
* பிரதி அமைச்சர் தெரிவிப்பு

`விசாரணைக்குப் பின்னர் விடுவிப்போம்' என்று கூறி கண்டி மெதமாநுவர வேவதன்னை தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பிலியந்தலை பகுதியில் இரும்புப் போத்தல் கடை நடத்தி வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை பிலியந்தலை பொலிஸார் கைது செய்து, கல்கிசை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக உறவினர்கள் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் புகார் செய்துள்ளனர்.

வேவதன்னை தோட்டத்தைச் சேர்ந்த மெய்யன் அமிர்தலிங்கம், செய்யன் சண்முகநாதன், மெய்யன் பாலச்சந்திரன், ராமலிங்கம் சிவகுமார், கதிர்வேல் சபாபதி, மாரிமுத்து ராஜேந்திரன், சண்முகம் மோகன்ராஜ் என்பவர்களே கடந்த 26.04.2008 இரவு பிலியந்தலை பொலிஸாரினால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்டவர்களின் சகோதரியான மெய்யன் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

பிலியந்தலையில் கடந்த 25.04.2008 மாலை இடம்பெற்ற பஸ்குண்டு வெடிப்பை தொடர்ந்து இடம்பெற்ற தேடுதலின்போதே இவர்கள் 7 பேரும் அழைத்துச்செல்லப்பட்டதாகவும் விசாரணைக்குப் பின்னர் விடுவிப்பதாகக் கூறிய பொலிஸார் தற்போது இவர்களை கல்கிசை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் மகேஸ்வரி மேலும் தெரிவித்தார்.

இவர்களுடன் பழனியாண்டி துரைராஜா, கோபால் விஜயரட்ணம், ஷ்ரீராம் ஷ்ரீகாந்த், சொக்கலிங்கம் வீரகுமார், எம்.திருவருட்செல்வம், பி.சத்தியராஜ், கே.விஜயகுமார், சுப்பிரமணியம் கேசவன், ஆறுமுகம் விஸ்வநாதன், ராசலிங்கம் சண்முகராஜ், பொன்னையா தியாகராஜா, கே.பந்துல ஆகிய 12 மலையக இளைஞர்களும் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த மெய்யன் மகேஸ்வரி மலையக இளைஞர்கள் என்று ஆவணங்களை உறுதிப்படுத்தி ஒப்படைத்தபோதும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று மேலும் தெரிவித்தார்.

இவர்களின் கைதுகள் தொடர்பாக பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன் கல்கிசை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகேஸ் பெரேராவுடனும் பயங்கரவாத பிரிவு, தேசிய புலனாய்வுப் பிரிவு உயரதிகாரிகளிடமும் தொடர்பு கொண்டதையடுத்து இன்று 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மேற்குறிப்பிட்ட 19 இளைஞர்களும் கெஸ்பாவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட இளைஞர்களை விடுவிப்பதற்கு சட்டத்தரணிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
ஐ.நா.செயலாளர் நாயகத்துடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
ஆங்கிலம் தெரியாதவர்கள் பிரிட்டனுக்குள் நுழைய தடை
தாதியர் வேலைநிறுத்தத்தால் இரத்தினபுரி ஆஸ்பத்திரியில் 3 நோயாளர்கள் மரணம்
வவுனியா செக்கடிபுலவில் வர்த்தகர் சுட்டுக்கொலை
நாளைய தேர்தல் குறித்து கட்சிகளின் பிரதிநிதிகள் எதிர்பார்ப்பது என்ன?
திருமலை மாவட்ட தேர்தலை ஒத்திவைக்க கோரும் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிப்பு
பேருவளை துவக்குச்சூட்டில் இருவர் பலி; இருவர் படுகாயம்
தோட்ட உரிமையாளரினால் தாக்கப்பட்ட தமிழ் மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு
கிழக்கு செல்வதற்கு வெளிநாட்டு ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு
சமரசிங்க தலைமையிலான குழு மே 11 இல் ஜெனீவா பயணம்
கொத்மலையில் கைதான இருவரில் ஒருவர் மரணம்
கிழக்கு நிரந்தரமாகவே பிரிந்திருப்பதா? இல்லையா? சர்வஜன வாக்கெடுப்பே நாளைய தேர்தல்
மனிதாபிமானச் செயற்பாடுகள் ஊடாக நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வோம்
வவுனியா-மதவாச்சி ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இணக்கம்
பாதுகாப்பை அகற்ற முயற்சி விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு
ஆடை ஏற்றுமதிக் கோட்டாவை புதுப்பிக்க அரசு தவறினால் பாரிய பொருளாதார நெருக்கடி
தடுத்துவைக்கப்பட்டுள்ள 19 மலையக இளைஞர்களையும் விடுவிக்க ஏற்பாடு
தேடுதலில் கைதானவர்களை விடுவித்த பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு நன்றி தெரிவிப்பு
ஜனநாயக விரோத அரசுக்கு சாட்டையடி கொடுக்க கிழக்கு மக்கள் ஐ.தே.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்
கணவனை இழந்த பட்டதாரி குடும்பப் பெண் வெள்ளை வானில் சென்றோரால் கைது
கண்டியில் பிரபல பாடசாலையொன்றின் அதிபருக்கு விஸா நீடிப்பு வழங்க அரசு மறுப்பு
தாதிகள் பணிப்பகிஷ்கரிப்பினால் ஆபத்தான நிலையில் நோயாளிகள்
2,171 அரச ஊழியர்கள் நாளை திருமலை மாவட்ட தேர்தல் கடமையில்
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையால் அடுத்த மாதங்களில் தட்டுப்பாடு ஏற்படும்
கதிர்காமம் முருகன் ஆலய திருவிழா சகல ஏற்பாடுகளும் பூர்த்தி
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மனித உரிமைகள் மேம்பட்ட நிலையில்
மூதூர் நகரை மீட்கச் சென்ற கொமாண்டோ அணியுடன் ஊர்காவல் படை வீரரும் சென்றார்
கிழக்குத் தேர்தல் நீதி, நேர்மையான முறையில் இடம்பெறபோவதில்லை
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் சிறந்த தீர்ப்பை வழங்குவர்; ஹக்கீம் நம்பிக்கை
கிழக்கை கோரப்பிடிக்குள் வைத்திருக்கும் அரசின் சூழ்ச்சித் திட்டத்தை மக்கள் தகர்த்தெறிவார்கள்
அபிவிருத்தி மாயையைக்காட்டி மக்களின் வாக்கை சூறையாட முஸ்லிம் அமைச்சர்கள் முண்டியடிப்பு
`முஸ்லிம் காங்கிரஸின் தலைமையை மாற்ற கிழக்குத் தேர்தல் நல்ல சந்தர்ப்பம்'
தமிழர்களின் 25 வருட ஆயுதப் போராட்டம் தோல்வி ஒரு அங்குல நிலத்தைக் கூட அவர்கள் பிடிக்கவில்லை
தம்பகல்ல வாகன விபத்தில் இராணுவ வீரர் பலி
ஊவாவில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதே எனது நோக்கம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com