புசல்லாவை கொத்மலை வீதியில் நேற்று முன் தினம் புதன்கிழமை மாலை புலிகளுடன் தொடர்புடையவர்களென சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களில் ஒருவர் சயனைட் அருந்தி மரணமானதாக நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காமினி மதுரட்ட தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் கஜேந்திரன் என்பரே மரணமாகியுள்ளார். இறந்தவரின் சடலம் நுவரெலியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மற்றவர் விசேட புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.
கண்டி திகன பகுதியிலிருந்து இவ்விரு இளைஞர்களும் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் இரம்பொடை ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு வருகை தந்ததாகவும் அவ்வாலயத்திற்கு அருகில் வாடகைக்கு வீடு தேடியதாகவும் அவ்வேளை பிரதேச மக்கள் கொத்மலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.