வவுனியா செக்கடிப்புலவு பகுதியில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று முற்பகல் 11 மணியளவில் செக்கடிப்பிலவு செல்வாநகரில் வைத்து இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நெளுக்குளம் 4 ஆம் கட்டையில் வர்த்தக நிலையத்தை நடத்திவரும் பாஸ்கரன் என்ற வர்த்தகரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.
இது குறித்து மாவட்ட நீதிபதிக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சடலத்தை வவுனியா ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவருமாறு நீதிபதி பொலிஸாரை பணித்திருந்தார்.
கடந்த சில தினங்களாக வவுனியாவில் இடம் பெற்று வரும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.