Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, May 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தாதியர் வேலைநிறுத்தத்தால் இரத்தினபுரி ஆஸ்பத்திரியில் 3 நோயாளர்கள் மரணம்
[09 - May - 2008] [Font Size - A - A - A]
* தொழிற்சங்க நடவடிக்கைக்கு தடைவிதிக்க பரிசீலனை; அமைச்சர் நிமால்

இரத்தினபுரி வைத்தியசாலை தாதியர்கள் மேற்கொண்ட தொழிற்சங்கப் போராட்டத்தினால் 3 நோயாளர்கள் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளனர்.

இதையடுத்து தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாதியர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென சூளுரைத்த சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி.சில்வா, நோயாளிகளை பணயம் வைப்பதா தொழிற்சங்கப் போராட்டத்தின் இலட்சணம் எனவும் கேள்வியெழுப்பினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

`நான் சட்டத்தரணி தொழிலிலும் தேர்ச்சி பெற்றவன். எனவே, போராட்டத்திலீடுபட்ட தாதியர்களினால் அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் குற்றவாளிகள்" அவர்களை சட்டத்தின் முன்நிறுத்த நான் தயங்கமாட்டேன்.

குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்தி அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நோயாளிகளை பணயம் வைப்பதை எந்த மதம்தான் அனுமதித்துள்ளது? இதுதான் இவர்களின் தொழிற்சங்க இலட்சணமா?

சுகாதார தொழிற்சங்கப் போராட்டத்தைத் தடைசெய்வது பற்றி அமைச்சு தீவிரமாக ஆராய்கிறது. தொழிற்சங்கங்களின் மக்கள் விரோதச் செயற்பாட்டைக் கண்டிக்க மக்கள் முன்வர வேண்டு" மென்றார்.

இதுபற்றி அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய கூறுகையில்;

"3 நோயாளிகள் இறப்புக்கு வைத்தியர்களே காரணம். அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தும்படி நாம் சுகாதார அமைச்சருக்கு ஆலோசனை கூறுகிறோம். வைத்தியர்களுக்கு சாதகமாக செயற்படும் சுகாதார அமைச்சு எமது தொழிற்சங்க உரிமையை அடக்க முயன்றால் முழு அரச சேவையாளர்களும் வீதியில் குதிப்போம்.

நிமால் சிறிபாலவின் கர்ஜனைக்கு அஞ்சி நாம் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரமாட்டோம். அவசர நிலையிலுள்ள நோயாளிகளை எமது தாதியர்கள் தொடர்ந்து பராமரிக்கின்றனர்" என்றார்.

இதேவேளை, 3 நோயாளிகளின் மரணத்தினால் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சு வைத்தியசாலையிலிருந்து நோயாளிகள் பலர் வெளியேறியுள்ளதாகவும் கூறியது.

Email this page Your Opinion Print this page
ஐ.நா.செயலாளர் நாயகத்துடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
ஆங்கிலம் தெரியாதவர்கள் பிரிட்டனுக்குள் நுழைய தடை
தாதியர் வேலைநிறுத்தத்தால் இரத்தினபுரி ஆஸ்பத்திரியில் 3 நோயாளர்கள் மரணம்
வவுனியா செக்கடிபுலவில் வர்த்தகர் சுட்டுக்கொலை
நாளைய தேர்தல் குறித்து கட்சிகளின் பிரதிநிதிகள் எதிர்பார்ப்பது என்ன?
திருமலை மாவட்ட தேர்தலை ஒத்திவைக்க கோரும் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிப்பு
பேருவளை துவக்குச்சூட்டில் இருவர் பலி; இருவர் படுகாயம்
தோட்ட உரிமையாளரினால் தாக்கப்பட்ட தமிழ் மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு
கிழக்கு செல்வதற்கு வெளிநாட்டு ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு
சமரசிங்க தலைமையிலான குழு மே 11 இல் ஜெனீவா பயணம்
கொத்மலையில் கைதான இருவரில் ஒருவர் மரணம்
கிழக்கு நிரந்தரமாகவே பிரிந்திருப்பதா? இல்லையா? சர்வஜன வாக்கெடுப்பே நாளைய தேர்தல்
மனிதாபிமானச் செயற்பாடுகள் ஊடாக நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வோம்
வவுனியா-மதவாச்சி ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இணக்கம்
பாதுகாப்பை அகற்ற முயற்சி விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு
ஆடை ஏற்றுமதிக் கோட்டாவை புதுப்பிக்க அரசு தவறினால் பாரிய பொருளாதார நெருக்கடி
தடுத்துவைக்கப்பட்டுள்ள 19 மலையக இளைஞர்களையும் விடுவிக்க ஏற்பாடு
தேடுதலில் கைதானவர்களை விடுவித்த பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு நன்றி தெரிவிப்பு
ஜனநாயக விரோத அரசுக்கு சாட்டையடி கொடுக்க கிழக்கு மக்கள் ஐ.தே.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்
கணவனை இழந்த பட்டதாரி குடும்பப் பெண் வெள்ளை வானில் சென்றோரால் கைது
கண்டியில் பிரபல பாடசாலையொன்றின் அதிபருக்கு விஸா நீடிப்பு வழங்க அரசு மறுப்பு
தாதிகள் பணிப்பகிஷ்கரிப்பினால் ஆபத்தான நிலையில் நோயாளிகள்
2,171 அரச ஊழியர்கள் நாளை திருமலை மாவட்ட தேர்தல் கடமையில்
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையால் அடுத்த மாதங்களில் தட்டுப்பாடு ஏற்படும்
கதிர்காமம் முருகன் ஆலய திருவிழா சகல ஏற்பாடுகளும் பூர்த்தி
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மனித உரிமைகள் மேம்பட்ட நிலையில்
மூதூர் நகரை மீட்கச் சென்ற கொமாண்டோ அணியுடன் ஊர்காவல் படை வீரரும் சென்றார்
கிழக்குத் தேர்தல் நீதி, நேர்மையான முறையில் இடம்பெறபோவதில்லை
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் சிறந்த தீர்ப்பை வழங்குவர்; ஹக்கீம் நம்பிக்கை
கிழக்கை கோரப்பிடிக்குள் வைத்திருக்கும் அரசின் சூழ்ச்சித் திட்டத்தை மக்கள் தகர்த்தெறிவார்கள்
அபிவிருத்தி மாயையைக்காட்டி மக்களின் வாக்கை சூறையாட முஸ்லிம் அமைச்சர்கள் முண்டியடிப்பு
`முஸ்லிம் காங்கிரஸின் தலைமையை மாற்ற கிழக்குத் தேர்தல் நல்ல சந்தர்ப்பம்'
தமிழர்களின் 25 வருட ஆயுதப் போராட்டம் தோல்வி ஒரு அங்குல நிலத்தைக் கூட அவர்கள் பிடிக்கவில்லை
தம்பகல்ல வாகன விபத்தில் இராணுவ வீரர் பலி
ஊவாவில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதே எனது நோக்கம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com