ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சொய்ப் அக்தர் கொல்கத்தாவில் அந்த அணியுடன் புதன்கிழமை பயிற்சியில் ஈடுபட்டார்.
அக்தர் செவ்வாய்க்கிழமை இரவு கொல்கத்தா வந்து சேர்ந்தார். ஈடன் கார்டனில் புதன்கிழமை பயிற்சியின்போது ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
முன்னதாக அக்தருக்கு 5 ஆண்டுத் தடையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விதித்திருந்தது. பின்னர் அத்தடையை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், புதன்கிழமை பயிற்சியில் அவர் 2 ஓவர்கள் மட்டுமே வீசினார். அதிலும் அவர் நோபோலும் , வைட்டுமாக வீசியது குறிப்பிடத்தக்கது. ஒரு ஓவர் முடிந்ததுமே அவர் மிகவும் களைப்படைந்தார். 2 ஆவது ஓவருக்குப் பின் அவர் பந்துவீச வரவில்லை.