சென்னை அணிக்கு எதிராக 14 ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியில் விளையாடுவேனென்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
ஐ.பி.எல்.போட்டிகளில் மும்பை அணியின் கப்டனாக சச்சின் உள்ளார். ஆனால், காயம் காரணமாக அவர் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் விளையாடவில்லை. பொலக் அவரது இடத்தில் கப்டனாக உள்ளார்.
இந்நிலையில், அடுத்த போட்டியில் தான் பங்கேற்கும் வாய்ப்பிருப்பதாக சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது;
அடுத்த போட்டியில் ஆட வேண்டுமென்று இலக்கு நிர்ணயித்துள்ளேன். முழுவதுமாக விளையாட முடிந்தால் மட்டுமே விளையாட வேண்டும். இல்லை என்றால் அது அணிக்குச் செய்யும் துரோகமாகும். 14 ஆம் திகதி சென்னைக்கு எதிராக நடைபெறவுள்ள ஆட்டத்தில் விளையாட முடியுமென நம்புகிறேன்.
ஐ.பி.எல்.போட்டிகள் அபார வெற்றி பெற்றுள்ளன. கிரிக்கெட் வரலாற்றிலேயே இது மிகப் பெரிய போட்டியாக அமைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள வீடுகளுக்கு கிரிக்கெட்டை ஐ.பி.எல். கொண்டு சென்றுள்ளது. ஐ.பி.எல். போட்டியில் கிரிக்கெட்டுக்கு புதிய ரசிகர்களைக் கொண்டு வரும்.
முப்பெல்லாம் கிரிக்கெட் போட்டியை ரசிக்க விரும்புகிறவர்கள் முழுநாளை செலவிட முடியாமல் திணறுவார்கள். ஆனால், இப்போது 3 மணி நேரத்தில் 20 ஓவர் போட்டி முடிந்துவிடுகிறது. இதனை குடும்பத்தோடு ரசிக்க முடியுமென்றார்.