Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, June 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
விரிவான குடிவரவு யோசனையை முன்வைக்க தயாராகிறது பிரான்ஸ்
[01 - June - 2008] [Font Size - A - A - A]
* "ஜூலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பு'

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைத்துவத்தை எதிர்வரும் ஜூலையில் ஏற்கவுள்ள பிரான்ஸ் விரிவான ஏற்பாடுகளை உள்ளடக்கிய குடிவரவு ஒப்பந்தமொன்றுக்கான யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக "பினான்சியல் ரைம்ஸ்' பத்திரிகை நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பான பிரெஞ்சு அரசின் ஆவணங்களை மேற்கோள்காட்டி பினான்சியல் ரைம்ஸ் செய்தியை வெளியிட்டிருக்கிறது.

வினைத்திறனுடனான நாடுகடத்தல் நடவடிக்கைகள், கட்டாயமாக மொழிகளை கற்றிருத்தல், மற்றும் உயிரியல் கணிப்பீட்டு விஸா வழங்கும் முறையை துரிதமாக அமுல்படுத்துதல் என்பன இந்த உத்தேச உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.

ஐரோப்பாவிற்கு வருகை தரும் குடியேற்றவாசிகளை கௌரவத்துடன் வரவேற்பதற்குரிய இதிகாச கால பொன்னகரமான எல்லோராடோ போன்றதொன்றல்ல ஐரோப்பா என்று அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம், பூகோள ரீதியான மற்றும் பொருளாதார ரீதியான குடிவரவுத் தேவையை ஏற்றுக்கொண்டதாக இந்த ஆவணம் காணப் படுகிறது.

மொழித்தேவையுடன் புதிய குடியேற்றவாசிகள் தேசிய, ஐரோப்பிய பெறுமானங்களான பால் சமத்துவம், சகிப்புத்தன்மை என்பனவற்றை உள்வாங்கிக் கொள்வதை ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பினர்களும் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

சட்டவிரோத குடியேற்றவாசிகள் தத்தமது நாடுகளுக்கு திரும்பிச் செல்வதற்கான புதிய யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

Email this page Your Opinion Print this page
விரிவான குடிவரவு யோசனையை முன்வைக்க தயாராகிறது பிரான்ஸ்
தாயை பின்பற்ற விரும்பும் பெனாசிரின் மகள் பக்தவர்
பேரழிவிலிருந்து ஈராக் மீண்டுள்ளதாக பான் கி மூன் தெரிவிப்பு
மன்னர் அரண்மனையைவிட்டு வெளியேறியதாக நேபாளத்தில் பரபரப்பு
சர்வதேச விண்வெளிக் கூடத்திற்கு புதிய உதிரிப்பாகங்களை அனுப்புகிறது நாசா
மலேரியா காய்ச்சல் வராமல் தடுக்கும் மருந்து கண்டுபிடிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com