திருகோணமலை கிளிவெட்டி ஆஸ்பத்திரியினுள் நேற்று சனிக்கிழமை பிற்பகல் புகுந்த ஆயுத பாணிகள் நோயாளர் ஒருவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.
கிளிவெட்டியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான யோகராஜா காளியப்பன் (21 வயது) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.
நோய்வாய்ப்பட்ட நிலையில் இவர் கிளிவெட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளொன்றில் சென்றவர்களே வார்ட்டினுள் நுழைந்து இவரைச் சுட்டுக் கொன்று விட்டு சென்றுள்ளனர்.
கிளிவெட்டியிலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பில் அகதி முகாமில் தங்கியிருந்த இவர் அண்மையிலேயே கிளிவெட்டி திரும்பி அகதி முகாமில் தங்கியிருந்தார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பின் இதுவரை ஐவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன், 24 பேர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதும் குறிப்பிடத்தக்கது.