கம்பஹா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எம்.பி. ரெஜி ரணதுங்க நேற்று சனிக்கிழமை காலமானார்.
சில காலமாக சுகவீனமுற்றிருந்த ரெஜி ரணதுங்க கொழும்பிலுள்ள தனியார் மருத்துவ மனையில் இறந்துள்ளார்.
அமைச்சராகவும் சப்ரகமுவ மாகாண முதலமைச்சராகவும் பதவி வகித்த ரெஜி ரணதுங்க, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டனும் எம்.பி.யுமான அர்ஜுண ரணதுங்கவின் தந்தையாவார்.
ரெஜி ரணதுங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிட த்திற்கு ஐ.ம.சு. உறுப்பினரில் ரூபசிங்க நியமிக்கப்படவுள்ளார். இந்த வருடம் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 4 எம்.பி.க்கள் உயிரிழந்துள்ளனர். ஸ்ரீபதி சூரியாராச்சி, அநுர பண்டார நாயக்க, ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, ரெஜி ரணதுங்க ஆகியோரே இவ்வருடம் மரணமடைந்துள்ளனர்.