Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, June 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வெள்ளவத்தையில் கைக்குண்டு வீச்சு இருவர் பலி; 10 ற்கும் மேற்பட்டோர் படுகாயம்
[01 - June - 2008] [Font Size - A - A - A]
கொழும்பு வெள்ளவத்தை காலி வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன் பத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

வெள்ளவத்தை காலி வீதியில் கடற்கரைப் பக்கமாக ராஜசிங்க வீதிக்கு அருகிலுள்ள பஸ் நிலையத்தின் மீதே நேற்றிரவு 8.45 மணியளவில் இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவரே பஸ் நிலையத்தில் நின்றவர்கள் மீது கைக்குண்டை வீசிவிட்டுச் சென்றதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

பாரிய சத்தத்துடன் குண்டுவெடித்ததால் வெள்ளவத்தை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் அதிரவே எங்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், இந்தக் கைக் குண்டுத் தாக்குதலுக்கிலக்காகி ஒருவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதுடன் படுகாயமடைந்த நிலையில் பத்திற்கும் மேற்பட்டவர்கள் களுபோவில ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். மேலும் சிலர் ஆபத்தான நிலையிலிருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

குண்டுத் தாக்குதலையடுத்து அந்தப் பகுதியில் நின்ற மக்கள் அவ்விடத்தை விட்டு சிதறியோடிய அதே நேரம் அப்பகுதியில் கடைகள், வர்த்தக நிலையங்கள் யாவும் உடனடியாக மூடப்பட்டன.

சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு உடனடியாக விரைந்த படையினரும் பொலிஸாரும், படுகாயமடைந்தவர்களை வாகனங்கள் மூலம் களுபோவில ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்ததுடன் காலி வீதியில் கடற்கரைப் பக்கமான வீதியை ராமகிருஷ்ண மிஷன் சந்தியுடன் மூடி வாகனங்களை அந்த வீதியூடாக கடற்கரைப்பக்கமாகத் திருப்பி விட்டனர்.

இதேநேரம், கைக்குண்டுத் தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றவர்களில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது தொடர்பாக படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை நடத்தி வருகின்ற போதும், கைக் குண்டு வீச்சு தொடர்பாக உடனடியாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்தச் சம்பவத்தையடுத்து மூடப்பட்ட காலி வீதி இரவு பத்து மணிக்குப் பின்னரே திறக்கப்பட்டது.

Email this page Your Opinion Print this page
வெள்ளவத்தையில் கைக்குண்டு வீச்சு இருவர் பலி; 10 ற்கும் மேற்பட்டோர் படுகாயம்
தனியார் சம்பளத்தை 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு வீதிக்கு இறங்கும் ஜே.வி.பி.
இரு இலங்கை சிறுவர் லண்டனில் படுகொலை
ரெஜி ரணதுங்க எம்.பி. காலமானார்
கிளிவெட்டி ஆஸ்பத்திரியில் நோயாளி சுட்டுக்கொலை
அடைமழை, வெள்ளம்; மூவர் பலி கினிகத்தேனையில் பாரிய மண்சரிவு
5 படையினர், 26 புலிகள் வடபகுதி மோதல்களில் பலி
13 ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்
எரிபொருள் பாவனையை மட்டுப்படுத்தும் திட்டத்தை அடுத்த வாரம் அரசு வெளியிடும்
வடக்கு, கிழக்கில் 3 மாவட்ட நீதிபதிகள் மேல்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு
இராணுவ நடவடிக்கைகளுக்கு காலக்கெடு யதார்த்தபூர்வமற்றது என்கிறார் கோஹண
சுயாதீன ஆணைக்குழுவை அமைத்த பின்பே அடுத்த தேர்தலை நடத்த வேண்டும்
வில்பத்து காட்டில் பாரிய தேடுதல்
கம்பஹாவில் தேடுதல் ஏழு தமிழர்கள் கைது
பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை ஜனாதிபதி ஆரம்பித்துவைக்கும் சாத்தியமில்லை
கடல்கோளிலிருந்து மக்களை பாதுகாக்க விழிப்புணர்வூட்டும் செயற்பாடு தீவிரம்
ஊடகவியலாளர் தேவகுமார் படுகொலை புதிய ஜனநாயக கட்சி கண்டனம் தெரிவிப்பு
கொச்சிக்கடை அந்தோனியார் ஆலய உற்சவம் 3 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்
மாகாண சபை உறுப்பினர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி
கிழக்கு மாகாணசபையின் முதலாவது கூட்டத்தில் எதிரணி உறுப்பினர்கள் பங்கேற்கமாட்டார்கள்
டீசல் விற்பனையிலிருந்து விலகும் தீர்மானம் ஐ.ஓ.சி.க்கு இதுவரை இல்லை
3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளம், மண்சரிவால் இடம்பெயர்வு
சிலாபம் மைனாதீவில் படையினர் தேடுதல் தற்கொலை அங்கிகள், கிளைமோர் மீட்பு
ஆஸ்பத்திரிகளில் போதிய மருந்துகள் இல்லை அமைச்சரை விளம்பரப்படுத்த நாடு பூராவும் சுவரொட்டிகள்
உயர்தர விஞ்ஞானப்பிரிவு மாணவர்களுக்கு ஜூனில் மாகாண மட்ட பொதுப்பரீட்சை
மின் மாற்றிகள், மின் உற்பத்தி நிலையங்களை பாதுகாக்க விசேட ஏற்பாடுகளில் அரசு
அமைச்சர் கொலை சந்தேக நபர் விடுதலை
கட்டிட நிர்மாணப்பணியில் ஈடுபட்டிருந்த ஏழு மலையக இளைஞர்கள் பொலிஸாரால் கைது
கிழக்கு ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்ப ஜூன் 9 இல் நேர்முகப் பரீட்சை
அட்டன் நகர புடவை கடையில் திடீர் தீ விபத்து; பெருமளவிலான பொருட்கள் நாசம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com