வவுனியா தமிழ்ச்சங்கம் நடத்தும் 5 நாள் இசை விழாவில் இரண்டாம் நிகழ்ச்சி வெள்ளி மாலை இடம்பெற்ற@பாது வவுனியா, வாணி கணினிப் பதிப்பக அதிபர் திரு.பொ.செல்வநாயகம் மங்கள விளக்கேற்ற, அருகில் அவர் தம் பாரியாரும் தமிழ்ச் சங்கப் பிரமுகர்களும் நிற்பதையும் "இளையவர் இசையரங்கு' நிகழ்ச்சியில் செல்வி கந்தப்பு ஜெயப்பிரதா பாட, சங்கீதபூசணம் ம.இராஜசிங்கம் மிருதங்கம் இசைப்பதையும் திருமதி. கயல்விழி சூரியகுமார் வயலின் இசை வழங்குவதையும் எஸ்.பிரபாகரன் மோர்சிங் இசைப்பதையும், சிறப்பு நிகழ்ச்சியாக இடம்பெற்ற தமிழ்நாடு, இசைமணி சி.ரஞ்சித் அவர்களின் இசையரங்கில் அவரை தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழருவி த.சிவகுமாரன் பொன்னாடைபோர்த்தி கௌரவிப்பதையும் காணலாம்.
முதலமைச்சர்கள் மாநாடு நேற்று சனிக்கிழமை பதுளையில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் (சந்திரகாந்தன் ) முதலமைச்சர்கள் சம்மேளனத்தின் தலைவராக பிள்ளையான் நியமிக்கப்பட்டிருக்கிறார். முதலமைச்சரின் அடுத்த மாநாட்டை மட்டக்களப்பில் நடத்துவதென @நற்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.