தெற்காசிய நாடுகள் பங்குபற்றும் தெற்காசிய சாம்பியன் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி 3 ஆம் திகதி மாலைதீவிலும் 4 ஆம் திகதி இலங்கையிலும் ஆரம்பமாகின்றது. ஏ.பிரிவில் பங்கு பற்றும் இந்தியா, மாலைதீவு, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய 4 நாடுகள் பங்குபற்றும் போட்டிகள் மாலைதீவிலும், பி.பிரிவில் பங்குபற்றும், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பூட்டான் ஆகிய 4 நாடுகள் பங்குபற்றும் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கிலும் நடைபெறும். இப்போட்டியின் ஆரம்பவைபவங்கள் மாலைதீவிலும் இறுதிவைபவம் 14 ஆம் திகதி இலங்கையிலும் நடைபெறும்.
3 ஆம் திகதி மாலைதீவில் நடைபெறும் ஆரம்ப வைபவத்தைத் தொடர்ந்து, அன்று நடைபெறும் 1 ஆவது போட்டியில் இந்திய அணியை எதிர்த்து நேபாள அணியும், 2 ஆவது போட்டியில் மாலைதீவு அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணியும் போட்டியிடும்.
4 ஆம் திகதி இலங்கையில் நடைபெறும் 1 ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்த்து பூட்டான் அணியும், 2 ஆவது போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து ஆப்கானிஸ்தான் அணியும் போட்டியிடும்.
5 ஆம் திகதி மாலைதீவில் நடைபெறும் 1 ஆவது போட்டியில், இந்திய அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணியும், 2 ஆவது போட்டியில் மாலைதீவு அணியை எதிர்த்து நேபாள அணியும் போட்டியிடும்.
6 ஆம் திகதி இலங்கையில் நடைபெறும் 1 ஆவது போட்டியில், பங்களாதேஷ் அணியை எதிர்த்து ஆப்கானிஸ்தான் அணியும், 2 ஆவது போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து பூட்டான் அணியும் போட்டியிடும்.
7 ஆம் திகதி மாலைதீவில் நடைபெறும் 1 ஆவது போட்டியில், பாகிஸ்தான் அணியை எதிர்த்து நேபாள அணியும், 2 ஆவது போட்டியில் இந்திய அணியை எதிர்த்து மாலைதீவு அணியும் போட்டியிடும்.
8 ஆம் திகதி இலங்கையில் நடைபெறும் 1 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து பூட்டான் அணியும், 2 ஆவது போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து பங்களாதேஷ் அணியும் போட்டியிடும்.
மேற்படி போட்டிகளில் இரு பிரிவுகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் 4 அணிகளுக்கிடையிலான அரை இறுதி ஆட்டங்கள் 11 ஆம் திகதி மாலைதீவிலும், இலங்கையிலும் நடைபெறும். இறுதிசாம்பியன் போட்டி 14 ஆம் திகதி இலங்கையில் நடைபெறும்.
இப்போட்டியில் சாம்பியனாகத் தெரிவு செய்யப்படும் அணிக்கு 50 ஆயிரம் ஸ்ரேலிங் பவுணும், 2 ஆம் இடத்தை பிடிக்கும் அணிக்கு 25 ஆயிரம் ஸ்ரேலிங் பவுணும், 3 ஆம், 4 ஆம் இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா 10 ஆயிரம் ஸ்ரேலிங் பவுணும் பரிசாக வழங்கப்படும். தெற்காசிய நாடுகளுக்கிடையிலான உதைபந்தாட்டச் சாம்பியன் போட்டி முதன் முதலாக 1993 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூர் மாநிலத்தில் நடாத்தப்பட்டது. இதுவரை 6 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இந்திய அணி 4 தடவைகளும், இலங்கையும், பங்களாதேஷ?ம் தலா ஒரு தடவையும் சாம்பியன் கிண்ணங்களை கைப்பற்றியுள்ளன.
இதன் விபரங்கள் வருமாறு, 1993 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடைபெற்ற 1 ஆவது போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய, இலங்கை அணிகள் போட்டியிட்டு, இந்திய அணி 10 கோலினால் வெற்றி பெற்றது.
1995 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 2 ஆவது போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கை இந்திய அணிகள் போட்டியிட்டு இலங்கை அணி 10 கோலினால் வெற்றி பெற்றது.
1997 ஆம் ஆண்டு நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் நடைபெற்ற 3 ஆவது போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்திய, மாலைதீவு அணிகள் போட்டியிட்டு, இந்திய அணி 51 கோல்களினால் வெற்றி பெற்றது.
1999 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 4 ஆவது போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா, பங்களாதேஷ் அணிகள் போட்டியிட்டு இந்திய அணி 20 கோலினால் வெற்றிபெற்றது.
2001 ஆம் ஆண்டு தவிர்க்கமுடியாத காரணங்களினால் போட்டி நடைபெறவில்லை. 2003 ஆம் ஆண்டு பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெற்ற 5 ஆவது போட்டியின் இறுதி ஆட்டத்தில் பங்களாதேஷ், மாலைதீவு அணிகள் போட்டியிட்டன. ஆட்ட இறுதியில் இரு அணிகளும் தலா ஒரு (11) கோலைப் போட்டமையினால். "டைபிரேக்கர்' முறையில் பங்களாதேஷ் அணி 53 கோல்கள் வித்தியாசத்தினால் வெற்றி பெற்றது.
2005 ஆம் ஆண்டு இறுதியாக பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடைபெற்ற 6 ஆவது போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய, பங்களாதேஷ் அணிகள் போட்டியிட்டு இந்திய அணி 20 கோலினால் வெற்றிபெற்றது.