கொழும்பிலுள்ள கிராம சேவையாளர் ஒருவரிடம் ஓர் அன்பர் ஆவணமொன்றில் கையொப்பம் வாங்கச் சென்றார்.
கையொப்பமிடும்போதே அந்தக் கிராம சேவையாளர், ""எனக்கு எதுவும் தரவேண்டாம். அநாதைகளுக்கு உதவுமுகமாக அந்தப் பெட்டியில் உங்களின் நன்கொடையை போடுங்கள்' என்றாராம்.
இப்படியே தன்னிடம் அலுவல் நிமித்தம் வருபவர்களிடம் கூறி, அங்குள்ள உண்டியல் பெட்டியை நிரப்பிக் கொள்ளுகிறாராம்.
"அநாதைச் சிறுவர்களுக்கு உதவ இந்த டிக்கெட்டை வாங்குங்கள்' என்ற கோரிக்கையும் சில சந்தர்ப்பங்களில் விடுக்கப்படுகிறதாம்.
இவ்விதம் பணம் சேகரிப்பது முறையானதா? அந்தப் பணம் அநாதைகளுக்குத்தான் போய்ச் சேரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்று வினவுகிறார், அந்த அன்பர்.
இது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!