புதுப்பிக்கப்பட்ட எஃப்16 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பை அமெரிக்க பாராளுமன்றம் வெளியிட்டுள்ளது.
நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்காத மிகப் பெரிய நட்பு நாடு என்ற அந்தஸ்தை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.
இந்நிலையில் புதுப்பிக்கப்பட்ட 12 நவீன ரக போர் விமானங்களை அந்நாட்டுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்தது.
அதன் ஒரு பகுதியாக எஃப் 16 ரக போர் விமானங்கள் இரண்டை ஏற்கனவே, அமெரிக்கா அனுப்பி வைத்தது.
இந்நிலையில் மீதமுள்ள 10 போர் விமானங்களும் விரைவில் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இருதரப்புக்குமிடையிலான இராணுவ ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.