Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, June 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அம்புலன்ஸில் வந்த நோயாளர் மீது காத்தான்குடியில் தாக்குதல்; கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
[06 - June - 2008] [Font Size - A - A - A]
அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையிலிருந்து நோயாளர்களுடன் மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கு நேற்று வியாழக்கிழமை வந்த அம்புலன்ஸ் மீதும் நோயாளர்கள் மீதும் காத்தான்குடியில் கடும் தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சமூகம் நேற்று நண்பகல் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியது.

அம்புலன்ஸ் வண்டி தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டதையும் நோயாளிகள் தாக்கப்பட்டதையும் கண்டித்தே நேற்று நண்பகல் 12.30 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை சமூகம் சேதமாக்கப்பட்ட அம்புலன்ஸ் சகிதம் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டப் பேரணி, மட்டக்களப்பு வைத்தியசாலையிலிருந்து ஆரம்பித்தது.

மத்திய வீதி ஊடாக மட்டக்களப்பு நகரை அடைந்து, பொலிஸ் நிலைய சந்திக்குச் சென்று, வாவிக் கரை வீதி ஊடாக மட்டக்களப்பு வைத்தியசாலையினை சென்றடைந்தது.

வாவிக்கரை வீதி ஊடாக ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்தபோது முதலமைச்சரின் அலுவலகம் இருக்கும் எல்லைக்குள் நுழைய முற்பட்டபோது பொலிஸார் தடுத்துநிறுத்தவே ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியில் படுத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதை அடுத்து அங்குவந்த மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்துப் பேசி சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார்.

Email this page Your Opinion Print this page
உயர் பாதுகாப்பு முகாமைத்துவம் தொடர்பாக புதிய சட்ட மூலம்; அமைச்சரவை அங்கீகாரம்
அம்புலன்ஸில் வந்த நோயாளர் மீது காத்தான்குடியில் தாக்குதல்; கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
பாலமோட்டையில் முன்னேற முயன்ற படையினருடன் புலிகள் கடும் மோதல்
புதிய கூட்டத் தொடரை ஆரம்பிக்க ஜனாதிபதி வருகைதராததையிட்டு ரணில் விமர்சிப்பு
தாயையும் மகளையும் வல்லுறவுக்குட்படுத்தி விட்டு தப்பிச் சென்ற காடையர்கள்; ஒலுவில் பகுதியில் சம்பவம்
மாணவர்கள், தனியார்துறை ஊழியர்கள் உட்பட பெருமளவு தமிழர்கள் வெள்ளவத்தையில் கைது
63 பொதுமக்கள், 108 படையினர் மே மாதம் பலி; 549 பேர் படுகாயம்
பெரிய மடுப்பகுதியில் விமானத் தாக்குதல்
மாகாணசபை தேர்தலின் பின் கிழக்கில் 16 பேர் படுகொலை 53 பேரை காணவில்லை; 20 பேர் காயம், 30 பேர் கைது
கிழக்கில் சட்டவிரோத ஆயுதங்களை உடனடியாக களைய மு.கா.வலியுறுத்தல்
பொத்துவில் காட்டுக்கு விறகு வெட்ட சென்ற 9 பேர் ஆயுதபாணிகளால் தடுத்துவைப்பு
மட்டுநகரில் நேற்றிரவு துப்பாக்கிச்சூடு இரு கான்ஸ்டபிள்கள் பலி; ஒருவர் காயம்
ராகம மாபொல வீதியில் குண்டு மீட்கப்பட்டு செயலிழப்பு
பாணந்துறையில் கடத்தப்பட்டவர் பிலியந்தலப் பகுதியில் மீட்பு
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மோசடி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுதாக்கல்
மாந்தையில் கிளைமோர் தாக்குதல் இரு பொதுமக்கள் உயிரிழந்தனர்
வெள்ளவத்தையில் கணினி விற்பனை நிலையத்தில் வெடி பொருட்கள் மீட்பு
வீதிகளில் மோதல்கள் நடந்து கொண்டிருந்தமையால் வயல்வெளிகள் ஊடாகவே கிளிவெட்டியை சென்றடைந்தோம்
ரயில் பாதை குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்பட்டவர் வவுனியாவில் கைது
மட்டக்களப்பில் தொடரும் வன்முறைச் சம்பவங்கள் எல்லைக்கிராம தமிழ், முஸ்லிம் மக்கள் இடம்பெயர்வு
புத்தர் கூட வன்முறையை விரும்பாத நிலையில் தமிழ் முஸ்லிம் உறவுக்கு பங்கம் விளைவிப்பதில் ஹெல உறுமய
கம்பளை நகரப் பகுதிகளில் தொற்று நோய் அபாயம் பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள்
விவசாய டிப்ளோமா கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
எம்.பி.யாகவோ, பெண்ணாகவோ பார்க்காமல் என்னை கேவலமாக திட்டினார் பொலிஸ் அதிகாரி
கிழக்கு மாகாண சபையின் இரண்டாவது அமர்வு ஜூன் 11 இல்
கல்பிட்டியில் இரு ஆட்டோக்களிலிருந்து 364 ஜெலிக்நைற் குச்சிகள் மீட்பு
ஆடை ஏற்றுமதி கோட்டா குறித்து ஆராய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இந்தவாரம் வருகை
கம்பஹா, கட்டுநாயக்காவில் தேடுதல் 13 தமிழர்கள், 6 சிங்களவர்கள் கைது
தம்புள்ளயில் தமிழ் வர்த்தகர் சுட்டுக் கொலை
மக்களை பலவழிகளிலும் சுரண்டும் அரசு ஊழியர் சேமலாப நிதியத்திலும் கை வைத்துவிட்டது
நிலப்பகுதியைப் பெற்றுக்கொடுக்கக் கோரி கொட்டியாக்கலை தோட்டத் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
மழை குறைந்தளவில் தொடர்ந்து பெய்யும் உணவு, ஆடைகளை வழங்குமாறு வேண்டுகோள்
முதலமைச்சர் பிள்ளையான் தலைமையில் கிழக்கு மாகாணத்தைக் கட்டி எழுப்புவோம்
யாழ்.குடாநாட்டில் சுமுக நிலையை உருவாக்க பொதுமக்களின் பங்களிப்பு அவசியமானதாகும்
கடத்தப்பட்ட இருவரும் வவுனியாவில் விடுவிப்பு
இரத்தோட்டை பகுதியில் தமிழ் மக்களுக்கு ஆவணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை வேண்டும்
குருநாகல் மாவட்ட தமிழ்மொழிமூல முஸ்லிம் பாடசாலைகளின் கல்விநிலை பெரும் பின்னடைவு
2010 ஆம் ஆண்டு எமது நாடு பால் உற்பத்தியில் தன்னிறைவு காணும்
பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு அரசுடன் இணையப் போவதாக கட்டுக்கதை கட்டுகிறார்கள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com