Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, June 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
மரண தண்டனை கோருகிறார் 9/11 தாக்குதல் கைதி
[07 - June - 2008] [Font Size - A - A - A]
வாஷிங்டன்: அமெரிக்காவில் இடம்பெற்ற செப்டெம்பர் 11 தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கைதியொருவர் மரண தண்டனை கோரியுள்ளார்.

2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதியன்று அமெரிக்காவின் நியூயோர்க் மற்றும் வாஷிங்டனில் நடைபெற்ற தாக்குதல்களின் சூத்திரதாரிகளில் ஒருவராகக் கருதப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் இதுபற்றிய வழக்கு விசாரணை நடக்கும் நீதிமன்றத்தில் தனக்கு மரண தண்டனையை வழங்குமாறு கோரியுள்ளார். அப்படிப்பட்ட தண்டனை வழங்கப்பட்டால் தான் தியாகியாகலாம் என்று அவர் கூறியுள்ளார்.

குவாண்டானமோ குடாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கலித் ஷேக் முகமதும், மற்ற நான்கு பேரும் அச்சிறை வளாகத்திலேயே இராணுவ நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

அமெரிக்கா மீதான தாக்குதல்களை இவர்கள் திட்டமிட்டதாகவும், தாக்குதல் நடத்த உதவியதாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொலை, சதிமற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை நிருபணமானால், இவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படும்.

Email this page Your Opinion Print this page
உலக உணவு உற்பத்தியை இருமடங்காக அதிகரித்து வறிய நாடுகளுக்கு உதவி வழங்க ஐ.நா.மாநாட்டில் தீர்மானம்
மரண தண்டனை கோருகிறார் 9/11 தாக்குதல் கைதி
வாஷிங்டனில் ஒபாமா ஹிலாரி திடீர் சந்திப்பு இறுதி முடிவை ஹிலாரி இன்று அறிவிப்பார்
18 ஆவது உலகப் பெண்கள் மாநாடு ஹனோயில் ஆரம்பம்
28 ஆயிரம் சினிமா படங்களை பார்த்து சாதனை
ரஷ்ய ஜனாதிபதி ஜேர்மனி விஜயம்
இஸ்ரேலுக்கு நிலையான ஆதரவை வழங்குவதில் பராக் ஒபாமா உறுதி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com