மொறட்டுவ மற்றும் கண்டியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து வட பகுதிக்கும் தென்பகுதிக்குமிடையிலான போக்குவரத்துகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
வவுனியா மற்றும் மன்னாரிலிருந்து நேற்று முன்தினம் கொழும்புக்குச் சென்றவர்கள் மதவாச்சி இராணுவ சோதனை நிலையத்தை தாண்டிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
மதவாச்சி சோதனை நிலையமூடாக தெற்கிலிருந்து வடக்கே சென்றவர்களே அனுமதிக்கப்பட்டனர்.
நேற்றும் வவுனியா மற்றும் மன்னாரி லிருந்து தெற்கே செல்ல எவரும் அனுமதிக்கப்படாத அதேநேரம், இந்தக் குண்டுவெடிப்புகளையடுத்து மிகச் சிலரே தெற்கே செல்வதற்காக மதவாச்சிக்குச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.