Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, June 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பிரதமருடனான பேச்சு தோல்வியடைந்தால் 11,12 ஆம் திகதிகளில் சுகவீன லீவு போராட்டம்
[08 - June - 2008] [Font Size - A - A - A]
* இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பில் பிரதமர் தலைமையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை தோல்வியுறும் பட்சத்தில் எதிர்வரும் 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் சுகவீனப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதன் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கருத்துத் தெரிவிக்கையில்;

1997 ஆம் ஆண்டு அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் முகமாக பி.ஈ.சி. பெரோ தலைமையிலான சம்பள ஆணைக்குழு அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது. நாம் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் முகமாக தீர்வினை முன்வைத்தோம். எனினும் கடந்த 11 ஆண்டுகளாக எந்தவித முடிவுமின்றி பிரச்சினை தொடர்கிறது.

இந்நிலையில் இந்த சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் முகமாக 2007 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி கல்வியமைச்சு இதற்குத் தீர்வு காணும் முகமாக இடைக்கால யோசனையை முன்வைத்தது.

இந்த இடைக்கால யோசனை இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. எமது தீர்வு யோசனையிலிருந்து இறங்கி இடைக்கால யோசனையை நடைமுறைப்படுத்துமாறு நாம் கோரி கடந்த முறை உயர்தர பரீட்சை திருத்தும் பணியின் போது போராட்டங்களை நடத்திய போதும் எந்தவித கரிசணையுமற்று கல்வியமைச்சு இருந்தது.

இந்த நிலையில் எமது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியதையடுத்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரதமர் தலைமையில் கல்வியமைச்சு அதிகாரிகளுடன், ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இது வெற்றி பெறாத விடத்து எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் சுகவீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
பாதுகாப்பில் மாற்றங்களை ஏற்படுத்த தீவிர நடவடிக்கை
முருங்கன் பகுதியில் குடும்பஸ்தர் சுட்டுக் கொலை
பூநகரி, முல்லைத்தீவு பகுதிகளில் இரு நாட்களாக கடும் விமானத் தாக்குதல்
பொதுமக்கள் படுகொலையையிட்டு தமிழ் கூட்டமைப்பு கடும் கவலை
திருமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இளஞ்செழியன்
பஸ் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக விசேட பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணை
மசகு எண்ணெய் விலை 139 டொலராக அதிகரிப்பு
பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும்
சம்பூரில் இந்தியாவுக்கு நிலம் வழங்குவதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல ஜே.வி.பி. முடிவு
அக்கரைப்பற்று தபாலகக் கட்டிடத்தின் தரையைக் கிண்டி ஆயுதமிருக்கிறதாவென சோதனை
கைதான மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் 36 பேர் விடுதலை
வவுனியா வடமேற்கில் படையினரின் மும்முனை முன்னேற்ற முயற்சி முறியடிப்பு
புல்மோட்டையில் கிளைமோர் தாக்குதல்
கொழும்பிலுள்ள புலிகளின் வலையமைப்பை அரசாங்கம் உடனடியாக அழிக்க வேண்டும்
கொழும்பில் தொடரும் குண்டுவெடிப்புகளையடுத்து பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை
பிரதமருடனான பேச்சு தோல்வியடைந்தால் 11,12 ஆம் திகதிகளில் சுகவீன லீவு போராட்டம்
வடபகுதி தென்னிலங்கை போக்குவரத்து இடைநிறுத்தம்
இராணுவத்திலிருந்து விலகிய 600 பேர் போக்குவரத்து சேவையில் நியமனம்
மண்டபம் அகதிகளை சந்தித்தார் வைகோ
கதிர்காமம் புனித பிரதேசத்தில் தீ விபத்து 42 கடைகள் எரிந்தன; 3 கோடி ரூபா நட்டம்
நடைமுறை சாத்தியங்களின் அடிப்படையில் கிடைத்ததை பெற்றுக் கொண்டு முன்னோக்கி செல்வதே சிறந்த வழி
எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து காலியில் ஐ.தே.கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வில் ஆளுநர் முக்கிய உரை
சட்டவிரோத ஆயுதங்களால் வன்செயல்கள் அதிகரிப்பு களைவதற்கு சிவில் சமூகத்தின் ஒத்துழைப்புக்கு வேண்டுகோள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com