Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, June 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கொழும்பிலுள்ள புலிகளின் வலையமைப்பை அரசாங்கம் உடனடியாக அழிக்க வேண்டும்
[08 - June - 2008] [Font Size - A - A - A]
* ஹெல உறுமய வலியுறுத்தல்

தெகிவளை முதல் கட்டுபெத்த குண்டுத்தாக்குதல் வரையிலான பயங்கரவாத செயற்பாடுகளின் மூலம் பலமான விடுதலைப்புலி வலையமைப்பொன்று கொழும்பில் காணப்படுகின்றமை தெளிவாக புலனாவதாக ஜாதிக ஹெலஉறுமய கட்சி தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இந்த விடுதலைப்புலிகளின் வலையமைப்பு பூண்டோடு அழிக்கப்படுவதற்கு பொலிஸ், முப்படை மற்றும் புலனாய்வு பிரிவினர் உரிய முறையில் வழிநடத்தப்பட வேண்டும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கில் படையினரின் முன்நகர்வுகளை சகித்துக் கொள்ள முடியாத பிரபாகரன் இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொள்வதாக ஜாதிக ஹெலஉறுமயவின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பட்டுள்ளார்.

சிவிலியன்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இவ்வாறான தாக்குதல்களின் மூலம் விடுதலைப்புலிகளின் தலைவரின் தோல்வி வெளிப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்னி நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் படைவீரர்களிடம் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக பிரபாகரன் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதாக சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு சக்திகளினால் படையினர் மீது மேற்கொண்ட அழுத்தங்கள் காரணமாகவே விடுதலைப்புலிகள் சுதந்திரமாக தாக்குதல்களை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேடுதல்கள், சுற்றிவளைப்புகள், வீடுகளை சோதனையிடல், விடுதிகளை சோதனையிடல் போன்ற நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

Email this page Your Opinion Print this page
பாதுகாப்பில் மாற்றங்களை ஏற்படுத்த தீவிர நடவடிக்கை
முருங்கன் பகுதியில் குடும்பஸ்தர் சுட்டுக் கொலை
பூநகரி, முல்லைத்தீவு பகுதிகளில் இரு நாட்களாக கடும் விமானத் தாக்குதல்
பொதுமக்கள் படுகொலையையிட்டு தமிழ் கூட்டமைப்பு கடும் கவலை
திருமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இளஞ்செழியன்
பஸ் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக விசேட பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணை
மசகு எண்ணெய் விலை 139 டொலராக அதிகரிப்பு
பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும்
சம்பூரில் இந்தியாவுக்கு நிலம் வழங்குவதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல ஜே.வி.பி. முடிவு
அக்கரைப்பற்று தபாலகக் கட்டிடத்தின் தரையைக் கிண்டி ஆயுதமிருக்கிறதாவென சோதனை
கைதான மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் 36 பேர் விடுதலை
வவுனியா வடமேற்கில் படையினரின் மும்முனை முன்னேற்ற முயற்சி முறியடிப்பு
புல்மோட்டையில் கிளைமோர் தாக்குதல்
கொழும்பிலுள்ள புலிகளின் வலையமைப்பை அரசாங்கம் உடனடியாக அழிக்க வேண்டும்
கொழும்பில் தொடரும் குண்டுவெடிப்புகளையடுத்து பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை
பிரதமருடனான பேச்சு தோல்வியடைந்தால் 11,12 ஆம் திகதிகளில் சுகவீன லீவு போராட்டம்
வடபகுதி தென்னிலங்கை போக்குவரத்து இடைநிறுத்தம்
இராணுவத்திலிருந்து விலகிய 600 பேர் போக்குவரத்து சேவையில் நியமனம்
மண்டபம் அகதிகளை சந்தித்தார் வைகோ
கதிர்காமம் புனித பிரதேசத்தில் தீ விபத்து 42 கடைகள் எரிந்தன; 3 கோடி ரூபா நட்டம்
நடைமுறை சாத்தியங்களின் அடிப்படையில் கிடைத்ததை பெற்றுக் கொண்டு முன்னோக்கி செல்வதே சிறந்த வழி
எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து காலியில் ஐ.தே.கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வில் ஆளுநர் முக்கிய உரை
சட்டவிரோத ஆயுதங்களால் வன்செயல்கள் அதிகரிப்பு களைவதற்கு சிவில் சமூகத்தின் ஒத்துழைப்புக்கு வேண்டுகோள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com