புல்மோட்டையில் படையினரின் வாகனத்தை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை நண்பகல் 12.15 மணியளவில் படையினரது வாகன அணியை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை புல்மோட்டை 9 ஆம் மைல் பகுதியில் இத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இத்தாக்குதலில் படையினரின் வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.