Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, June 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மசகு எண்ணெய் விலை 139 டொலராக அதிகரிப்பு
[08 - June - 2008] [Font Size - A - A - A]
மசகெண்ணெய் விலை பரலொன்று 139 டொலராக அதிகரித்துள்ள நிலையில், எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிராக நாடுகள் மானியங்களை குறைத்துக்கொள்ள வேண்டுமென்றும் சக்தி வளத்துறையில் அதிகளவு முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அமெரிக்கா நேற்று சனிக் கிழமை வலியுறுத்தியிருக்கிறது.

அதே சமயம் எண்ணெய் உற்பத்தி நாடுகள் தமது உற்பத்தி அளவு மட்டத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் வாஷிங்டன் கூறியுள்ளது.

உலக எண்ணெய்விலையானது கேள்விக்கும் நிரம்பலுக்கும் இடையிலான பிரச்சினையாக உருவெடுத்திருப்பதாக அமெரிக்க சக்தி வளத்துறை அமைச்சர் சாமுவேல் பொட்மான் கூறியுள்ளார். எண்ணெய் உற்பத்தியானது 2005 இலிருந்து நாளொன்றுக்கு 85 மில்லியன் பரல்களாக மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அதே சமயம் பொருளாதார வளர்ச்சி குறிப்பாக, இந்தியாவினதும் சீனாவினதும் வளர்ச்சியானது முன்னொரு போதுமில்லாத அளவுக்கு எரிபொருளின் தேவையை அதிகரிக்க வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

8 கைத்தொழில் நாடுகளின் சக்தி வளத்துறை அமைச்சர்களின் மாநாடு ஜப்பானின் வடபகுதி நகரமான ஓமோரியில் நேற்று ஆரம்பமாகியது. இந்த மாநாட்டில் இந்தியா, சீனா, தென்கொரியாவின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அமெரிக்க சக்தி வளத்துறை அமைச்சர் பொட்மான், ?கஷ்டமான நிலைமையில் நாம் இருக்கின்றோம். உற்பத்தியை இறுக்கமாக்கியிருக்கிறோம். அதேசமயம் உலகில் தேவை (எரிபொருள்) அதிகரித்துக் கொண்டு செல்கிறது என்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

எண்ணெய் விலை இரு நாட்களில் 13 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

எரிபொருள் விலை அதிகரிப்பால் ஏற்படும். பொருளாதாரப் பாதிப்பானது குறிப்பாக அமெரிக்காவுக்கு ஏற்படும் பாதிப்பானது எண்ணெய் உற்பத்தியாளரையே தாக்கும் என்று பொட்மான் கூறுகிறார்.

அமெரிக்கா பொருளாதார ரீதியில் போராடுவதைப் பார்ப்பது எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு நல்லதல்ல. உலக பொருளாதார நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க விதத்தில் அவர்கள் எம்மில் தங்கியுள்ளனர் என்றும் பொட்மான் கூறியுள்ளார்.

Email this page Your Opinion Print this page
பாதுகாப்பில் மாற்றங்களை ஏற்படுத்த தீவிர நடவடிக்கை
முருங்கன் பகுதியில் குடும்பஸ்தர் சுட்டுக் கொலை
பூநகரி, முல்லைத்தீவு பகுதிகளில் இரு நாட்களாக கடும் விமானத் தாக்குதல்
பொதுமக்கள் படுகொலையையிட்டு தமிழ் கூட்டமைப்பு கடும் கவலை
திருமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இளஞ்செழியன்
பஸ் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக விசேட பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணை
மசகு எண்ணெய் விலை 139 டொலராக அதிகரிப்பு
பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும்
சம்பூரில் இந்தியாவுக்கு நிலம் வழங்குவதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல ஜே.வி.பி. முடிவு
அக்கரைப்பற்று தபாலகக் கட்டிடத்தின் தரையைக் கிண்டி ஆயுதமிருக்கிறதாவென சோதனை
கைதான மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் 36 பேர் விடுதலை
வவுனியா வடமேற்கில் படையினரின் மும்முனை முன்னேற்ற முயற்சி முறியடிப்பு
புல்மோட்டையில் கிளைமோர் தாக்குதல்
கொழும்பிலுள்ள புலிகளின் வலையமைப்பை அரசாங்கம் உடனடியாக அழிக்க வேண்டும்
கொழும்பில் தொடரும் குண்டுவெடிப்புகளையடுத்து பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை
பிரதமருடனான பேச்சு தோல்வியடைந்தால் 11,12 ஆம் திகதிகளில் சுகவீன லீவு போராட்டம்
வடபகுதி தென்னிலங்கை போக்குவரத்து இடைநிறுத்தம்
இராணுவத்திலிருந்து விலகிய 600 பேர் போக்குவரத்து சேவையில் நியமனம்
மண்டபம் அகதிகளை சந்தித்தார் வைகோ
கதிர்காமம் புனித பிரதேசத்தில் தீ விபத்து 42 கடைகள் எரிந்தன; 3 கோடி ரூபா நட்டம்
நடைமுறை சாத்தியங்களின் அடிப்படையில் கிடைத்ததை பெற்றுக் கொண்டு முன்னோக்கி செல்வதே சிறந்த வழி
எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து காலியில் ஐ.தே.கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வில் ஆளுநர் முக்கிய உரை
சட்டவிரோத ஆயுதங்களால் வன்செயல்கள் அதிகரிப்பு களைவதற்கு சிவில் சமூகத்தின் ஒத்துழைப்புக்கு வேண்டுகோள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com