Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, June 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பொதுமக்கள் படுகொலையையிட்டு தமிழ் கூட்டமைப்பு கடும் கவலை
[08 - June - 2008] [Font Size - A - A - A]
*கிழக்கு நிலைவரம் குறித்தும் விசனம்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொது மக்கள் கொல்லப்படுவது குறித்தும் மாகாண சபைத் தேர்தலின் பின்னர் கிழக்கில் வன்முறைகள் அதிகரித்து வருவதையிட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருக்கிறது.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் பொதுமக்கள் படுகொலைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையென வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சம்பந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; விமானக் குண்டு வீச்சு, ஷெல் தாக்குதல், ஆழ ஊடுருவல் பிரிவுகளின் கிளைமோர்த் தாக்குதல் என்பனவற்றால் வன்னியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகளென பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவை கிரமமாக இடம்பெற்றுவருவதுடன் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் மக்கள் மீதான இத்தகைய கொலைகளை தனது அதிகாரத்திற்குட்பட்ட வகையில் அரசு முடிவுக்கு கொண்டுவரவேண்டும். இதேபோன்று ஆண்கள், பெண்கள், சிறுவர்களென பொதுமக்கள் குறிப்பாக சிங்கள மக்களும் ஏனைய சமூகங்களைச் சேர்ந்தவர்களும் நாட்டின் ஏனைய பகுதிகளில் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். இத்தகைய தாக்குதல்களால் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு அதிகளவிலான துன்பங்கள் ஏற்படுவதுடன் மக்கள் மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வும் தோன்றியுள்ளது. இத்தகைய வன்முறைகள்யாவும் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டுமென கோருகின்றோம்.

இதேவேளை கிழக்கு மாகாண சபை தேர்தலைத் தொடர்ந்து கிழக்கில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வன்முறைச் சம்பவங்களினால் தமிழ், முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர்கள் கொல்லப்பட்டதுடன் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய சம்பவங்கள் தேவையற்ற விதத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே மோதலை ஊக்குவிக்கும். நிலைமையை உடனடியாக கட்டுப்படுத்துவதில் சட்டத்தை அமுலாக்கும் தரப்பு தவறியுள்ளமையானது தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் முரண்பாட்டை ஊக்குவிக்கும்.

மறைமுக முயற்சிகள் இடம்பெறுகின்றதா என்ற கேள்விகளை தோற்றுவித்திருக்கிறது. வன்முறைகளிலிருந்தும் விலகி நிற்குமாறு தமிழ்க் கூட்டமைப்பு சகலரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றது. பல நூற்றாண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் ஐக்கியத்துடன் தொடர்ந்தும் ஒற்றுமையாக வாழவேண்டும். அத்தகைய ஐக்கியப்பாடானது அவர்களின் பொதுவான நலன்களுக்கு அத்தியாவசியமானதாகும். தம்மை பிரிக்க முயற்சிக்கும் விரும்பத்தகாத சக்திகளின் முயற்சிகளுக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் இடமளிக்கக்கூடாது.

Email this page Your Opinion Print this page
பாதுகாப்பில் மாற்றங்களை ஏற்படுத்த தீவிர நடவடிக்கை
முருங்கன் பகுதியில் குடும்பஸ்தர் சுட்டுக் கொலை
பூநகரி, முல்லைத்தீவு பகுதிகளில் இரு நாட்களாக கடும் விமானத் தாக்குதல்
பொதுமக்கள் படுகொலையையிட்டு தமிழ் கூட்டமைப்பு கடும் கவலை
திருமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இளஞ்செழியன்
பஸ் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக விசேட பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணை
மசகு எண்ணெய் விலை 139 டொலராக அதிகரிப்பு
பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும்
சம்பூரில் இந்தியாவுக்கு நிலம் வழங்குவதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல ஜே.வி.பி. முடிவு
அக்கரைப்பற்று தபாலகக் கட்டிடத்தின் தரையைக் கிண்டி ஆயுதமிருக்கிறதாவென சோதனை
கைதான மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் 36 பேர் விடுதலை
வவுனியா வடமேற்கில் படையினரின் மும்முனை முன்னேற்ற முயற்சி முறியடிப்பு
புல்மோட்டையில் கிளைமோர் தாக்குதல்
கொழும்பிலுள்ள புலிகளின் வலையமைப்பை அரசாங்கம் உடனடியாக அழிக்க வேண்டும்
கொழும்பில் தொடரும் குண்டுவெடிப்புகளையடுத்து பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை
பிரதமருடனான பேச்சு தோல்வியடைந்தால் 11,12 ஆம் திகதிகளில் சுகவீன லீவு போராட்டம்
வடபகுதி தென்னிலங்கை போக்குவரத்து இடைநிறுத்தம்
இராணுவத்திலிருந்து விலகிய 600 பேர் போக்குவரத்து சேவையில் நியமனம்
மண்டபம் அகதிகளை சந்தித்தார் வைகோ
கதிர்காமம் புனித பிரதேசத்தில் தீ விபத்து 42 கடைகள் எரிந்தன; 3 கோடி ரூபா நட்டம்
நடைமுறை சாத்தியங்களின் அடிப்படையில் கிடைத்ததை பெற்றுக் கொண்டு முன்னோக்கி செல்வதே சிறந்த வழி
எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து காலியில் ஐ.தே.கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வில் ஆளுநர் முக்கிய உரை
சட்டவிரோத ஆயுதங்களால் வன்செயல்கள் அதிகரிப்பு களைவதற்கு சிவில் சமூகத்தின் ஒத்துழைப்புக்கு வேண்டுகோள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com