மன்னார் முருங்கன் பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை இரவு குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
முருங்கன் அளவக்கை புதுக்குடியிருப்பு பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 07.30 மணியளவில் தனது வீட்டிற்குப் பின்னாலுள்ள குளத்திற்கு குளிக்கச் சென்றவரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நடராஜா ஜெயராஜன் (36 வயது) என்ற சீவல் தொழிலாளியான இவர் ஐந்து பிள்ளைகளின் தந்தையுமாவார்.
இவரது சடலம் நேற்று பிற்பகல் 03.15 மணியளவில் முருங்கன் பொலிஸாரால் எடுத்து வரப்பட்டு மன்னார் ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டது.
ஆஸ்த்திரிக்குச் சென்ற மாவட்ட பதில் நீதிபதி கயஸ் பெல்டானோ சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.