நண்பரின் மகள் விதம்விதமான புதிய தலையணை உறைகளை அடுக்கிக் கொண்டிருந்தார்.
புதிதாக வாங்கியிருக்கிறீர் போலிருக்கிறது. ஒன்றின் விலை என்ன? என்று கேட்டேன்.
நண்பரின் மகள் சிரித்துக் கொண்டே "அங்கிள் ! இவை யாவும் இலவசமாகக் கிடைத்தவை. ஒரு ரூபா கூட செலவாகவில்லை' என்றார்.
அப்படியானால் இவை அன்பளிப்புகளா? என்று நான் கேட்டதும் அம்மாவின் சகோதரி தையல் வேலை செய்கிறார் அல்லவா! மீதப்படும் துணிகளில் தலையணை உறைகள், கைக்குட்டைகள், கதிரை மேலுறைகள் போன்றவற்றைத் தைத்துத் தருகிறார் என்ற பதில் வந்தது.
ஆடை தைப்பதற்காகக் கொண்டு வரப்படும் துணிகளில் அவர் வேண்டுமென்றே மீதம் எடுக்கிறாரோ என்று நான் வேடிக்கையாகக் குறிப்பிட்டேன்.
தேன் எடுப்பவர் கையை நாவினால் தடவாமலா இருப்பர்!