Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, July 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சகல இன மக்களுக்குரிய உரிமைகள் வழங்கப்படாமையே ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைக்கு காரணம்
[21 - July - 2008] [Font Size - A - A - A]
* அமைச்சர் டிலான் பெரேரா தெரிவிப்பு

இந்நாட்டிலுள்ள சகல இன மக்களுக்கும் உரிய உரிமைகள், சலுகைகள் சம அளவில் வழங்கப்படாமையினாலே இன்று ஆயுதம் ஏந்திப் போராடி உரிமையை வென்றெடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்று நீதி அமைச்சரும், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத் தலைவருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

மல்வானை தேசிய சேவை சம்மேளனம் (N.கு.ஊ.) நடத்திய கழகங்களுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் வியாழக்கிழமை மல்வானை அல்முபாரக் தேசிய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது;

நாம் இந்நாட்டில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்று எந்த மதத்தை சார்ந்தவர்களாயினும் எந்தமொழி பேசுகின்றவர்களாயினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏன் ஐக்கிய தேசியக்கட்சி என எதுவாக இருந்தாலும் நீதிக்கு முன்னிலையில் சமம்.

ஆனால், இன்று இந்நிலை மாறிவிட்டது. இதனையே இன்று விளையாட்டுகள் மூலம் எமது ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் தலைமைத்துவப் பயிற்சி போன்றவற்றையும் அனுபவங்களையும் பெற்று நாளைய சமூகத்துக்கு நல்ல தலைவர்களாக உருவாக்க இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்று முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் பிரதேசங்களில் மட்டுமல்ல பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு போன்ற பகுதிகளிலும் அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் கடல்கோளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் நலன்கருதி கல்முனையில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை மக்களுக்கு வழங்க முடியாத நிலையானது கவலைக்குரியது.

அப்பகுதி மக்கள் கடல்கோளால் பாதிக்கப்பட்டதை நான் நேரடியாகச் சென்று பார்த்தவன். அவர்களின் அவலங்களை கேட்டு அறிந்தவன் என்ற வகையில் அவ்வீடுகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று நான் பலமுறை இன்று அதனை தடுக்கும் பௌத்த பிக்குகளிடம் வேண்டினேன். இது பற்றி பலமுறை ஊடகங்கள் மூலமாகவும் அவர்களை தெளிவுபடுத்தினேன். ஆனால், இதனை இன்று வழங்க முடியாதவாறு எதிர்த்து பௌத்த பிக்குகள் தடுக்கின்றனர். நான் ஒரு பௌத்தன் என்ற வகையில் புத்த பெருமான் கூறும் ""மைத்ரி' என்ற அந்த அடுத்தவருக்கு உதவ வேண்டும் இரக்கப்பட வேண்டும் என்ற பதத்திற்கு மதிப்பளிக்கின்றேன்.

ஆனால், அந்த பிக்குகளிடம் இத்தன்மை இல்லை. இதனால் தான் அவர்கள் இதனை தடுத்துநிறுத்த முனைகின்றனர். இந்நிலைமையானது மாற்றமடைய வேண்டும்.

கரப்பந்தாட்டம் என்பது எமது நாட்டின் தேசிய விளையாட்டு. இதில் இன மத மொழி பேதமின்றி சகலரும் விளையாடுவது எமது தேசிய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகும்.

இது வரவேற்கத்தக்கது. இது போன்றே பிரச்சினைகளுக்கும் புரிந்துணர்வு மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.

இங்கு கம்பஹா உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ. கபூர் உரையாற்றுகையில் இன்று பாடசாலைகளில் பரீட்சைகளை நிறைவுசெய்த சுமார் 16 ஆயிரம் முஸ்லிம் மாணவர்களில் ஆயிரத்து 500 பேர் வரையே உயர் கல்விக்காக பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் ஏனைய மாணவர்கள் சிறந்த முறைகளில் வழிநடாத்தப்பட வேண்டும். இதில் விளையாட்டுகளும் பங்கு வகிக்கின்றன.

இல்லாவிடின் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலை உருவாக்கப்படும். எனவே எதிர்காலத்தில் நாம் இதுபோன்ற போட்டிகள் மூலமாக தேசிய ஒற்றுமையை வளர்க்க முற்பட வேண்டும்.

Email this page Your Opinion Print this page
சார்க் உச்சிமாநாட்டை இடையூறின்றி நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி
காரைதீவில் நள்ளிரவு குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
வத்தளை வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி
இலுப்பைக்கடவை படையினர் வசம்
தொலைக்காட்சிப் பெட்டி வீழ்ந்து குழந்தை மரணம்
"சார்க்' மாநாட்டு பாதுகாப்பு நடவடிக்கையால் 10 ஆயிரம் கூலித்தொழிலாளர்கள் வேலை இழப்பு
முழங்காவிலில் முப்படையும் தாக்குதல் 10 பேர் படுகாயம்; மக்கள் தப்பியோட்டம்
400 ஊழியரை பணியிலிருந்து நிறுத்த ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் திட்டம்
கிழக்கில் ஜனநாயகம் நிலவுவதாக அரசு கூறுகிறது ஆனால் ஆயுதக் குழுவே மாகாண சபையை நிர்வகிக்கிறது
2008 இல் 5 ஆயிரம் புலிகள் பலி பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு
5 தமிழ் இளைஞர்கள் சப்புகஸ்கந்தவில் கைது
கிழக்கு மாகாண சபை அமர்வு நாளை மீண்டும் ஆரம்பம்
முகமாலை முன்னரங்குகள் மீது புலிகள் வலிந்த தாக்குதலை நடத்த வேண்டும்
விமானநிலைய தீர்வையற்ற கடைகளில் மின் உபகரண கொள்வனவுக்கு கட்டுப்பாடு
அம்பாறையில் 2 படையினர் பலி
கொழும்பில் நடக்கவுள்ள சார்க் மாநாட்டை ஒரு போதும் நாம் சீர்குலைக்கமாட்டோம்
தனது உயிருக்கு ஆபத்தேற்பட்டால் அரசே பொறுப்பென்கிறார் ஜானகபெரேரா
சார்க் மாநாட்டை முன்னிட்ட கட்டுப்பாடுகளால் உல்லாச ஹோட்டல்களுக்கு வருமானம் இழப்பு
கொள்ளையில் ஈடுபட்ட இரு பொலிஸார் கைது
காரைதீவு கடலில் மூழ்கிய இரு மாணவர்களது சடலங்கள் நேற்றுக்காலை கரையொதுங்கின
4 சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்
தந்தையின் குற்றத்தால் மகள் தீ மூட்டி தற்கொலை
"மகிந்த ராஜபக்ஷ இருக்கும்வரை ஐக்கிய தேசிய கட்சியால் எந்தவகையிலும் வெற்றிபெற முடியாது'
ஜனாதிபதிக்கு வால்பிடிப்பவர்களே சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நியமனமென ஐ.தே.க. விசனம்
தெற்காசிய மக்கள் மாநாடு 2008 இல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
நுளம்பால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த மருந்தூட்டப்பட்ட வலைகள் விநியோகம்
யாழ். குடாநாட்டு மக்களின் சமூக வாழ்வோடு அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்திற்கு நீண்ட தொடர்புண்டு
அட்டன் சிரேஷ்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீதி சோதனை நடவடிக்கைகள் தீவிரம்
யாழ். மாவட்டத்தில் வாக்காளர் இடாப்புகள் திருத்தும் பணிகள் 23 ஆம் திகதி ஆரம்பம்
குடாநாட்டில் சி.டி.எம்.ஏ. தொலைபேசி பாவனையாளர்கள் பொலிஸ் அனுமதியைப் பெற்றால் மட்டுமே மீள இணைப்பு
அடுத்த 10 வருடங்களுக்கு ஐ.தே.க. அதிகாரத்துக்கு வரமுடியாது
நல்லூர் கந்தன் வருடாந்த மகோற்சவம் அனைத்து சேவைகளுக்கும் ஏற்பாடு
"பதவிக்கும் கோடிப்பணத்திற்குமாக வாக்களித்த மக்களை கைவிட்டு கட்சிமாறுபவனல்ல நான்'
சகல இன மக்களுக்குரிய உரிமைகள் வழங்கப்படாமையே ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைக்கு காரணம்
ஒவ்வொருவரும் தத்தமது குடும்ப வருமானத்தை உயர்த்த வழி காண்பதே இன்றைய உடனடித் தேவை
யுத்தம் நடைபெறும் நாட்டில் வாழ்க்கைச் செலவும் நெருக்கடிகளும் இருக்கும் என்கிறார் அமைச்சர் டலஸ்
அன்னை, சுவாமி ஆகியோரின் மறைவு அநுராதபுர இந்துக்களுக்கு பேரிழப்பாகும்
இலங்கை வீரர்களுக்கு டெஸ்ட் தொடரில் இஷாந்த் சர்மா கடும் நெருக்கடி கொடுப்பார்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com