Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, July 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
"பதவிக்கும் கோடிப்பணத்திற்குமாக வாக்களித்த மக்களை கைவிட்டு கட்சிமாறுபவனல்ல நான்'
[21 - July - 2008] [Font Size - A - A - A]
* ஐ.தே.க.பாராளுமன்ற உறுப்பினர் பாலிதரங்க பண்டார

""அமைச்சுப் பதவிக்கும், கோடிப் பணத்திற்கும் சலுகைகளுக்காக எனக்கு வாக்களித்த என் கட்சிக்காரர்களை கைவிட்டு கட்சி மாறும் எண்ணம் எனக்கில்லை. ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட நான் கடைசிவரையும் ஐக்கிய தேசியக் கட்சிக்காரனாகவே இருப்பேன்' என புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் பாலிதரங்க பண்டார கூறினார்.

மாதம்பை நகரிலுள்ள புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்ற கட்சியின் புத்தளம் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.லெரின் பெரேரா, வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான எம்.ஐயூப்கான், சுதத்சந்திர சேகர, முன்னாள் அமைச்சரான. பெஸ்டஸ் பெரேரா, திருமதி.ஹெரல் ஹேரத், கட்சியின் புத்தளம் மாவட்ட முஸ்லிம் விவகார இணைப்பாளர் ஏ.ஆர்.எம்.ரபாத் அமீன், புத்தளம் தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.இப்திகார் முகம்மட் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச மற்றும் தொகுதி அமைப்பாளர்கள், பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார கூறியதாவது;

"என்றுமில்லாதவாறு இன்றைய ஆட்சியில் மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்குள்ளாகியுள்ளனர். வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் மலைபோல் உயர்வடைந்து செல்கின்றது. இதனால் உழைக்கும் வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒரு மாதத்திற்காகப் பெறும் சம்பளத்தில் இன்று ஒரு வாரத்தைக் கூட நகர்த்திக் கொள்ள முடியாத நிலையில் மக்கள் பசி பட்டினியால் சிரமப்படுகின்றனர்.

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள இவ்வாறான வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றமே காரணம் என்று கூறுகின்றனர். இன்று நாட்டில் வீண் விரயங்களும், ஊழல் துஷ்பிரயோகங்களும் மலிந்து விட்டன. இந்நாட்டு மக்கள் இன்று அனுபவிக்கும் இந்த துயரத்திற்கு இவ்வாறான வீண் விரயங்களும் ஊழல் மோசடிகளுமே காரணமாகும். மக்கள் தமது அன்றாட வாழ்க்கைச் செலவைச் சமாளித்துக் கொள்ள முடியாது திண்டாடிக் கொண்டிருக்கும் போது இந்நாட்டுக்கு எவ்வகையிலேனும் பொருத்தமற்ற அமைச்சுகளை ஏற்படுத்தி அமைச்சர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர்.

இந்நாட்டு மக்களிடத்தில் செல்வாக்கை இந்த அரசு தினம் தினம் இழந்து வருகின்றது. மக்களை பெரும் திண்டாட்டத்திற்குள்ளாக்கியுள்ள இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கிவிட்டது. இந்த அரசின் மக்கள் விரோதப் போக்குகளுக்கெதிராக நாம் வீதிப் போராட்டங்களை நடத்தவுள்ளளோம்'

இக்கூட்டத்தில், புத்தளம் மாவட்டத்தின் கட்சியின் மறுசீரமைப்புப் பணிகளை முன்னெடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Email this page Your Opinion Print this page
சார்க் உச்சிமாநாட்டை இடையூறின்றி நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி
காரைதீவில் நள்ளிரவு குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
வத்தளை வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி
இலுப்பைக்கடவை படையினர் வசம்
தொலைக்காட்சிப் பெட்டி வீழ்ந்து குழந்தை மரணம்
"சார்க்' மாநாட்டு பாதுகாப்பு நடவடிக்கையால் 10 ஆயிரம் கூலித்தொழிலாளர்கள் வேலை இழப்பு
முழங்காவிலில் முப்படையும் தாக்குதல் 10 பேர் படுகாயம்; மக்கள் தப்பியோட்டம்
400 ஊழியரை பணியிலிருந்து நிறுத்த ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் திட்டம்
கிழக்கில் ஜனநாயகம் நிலவுவதாக அரசு கூறுகிறது ஆனால் ஆயுதக் குழுவே மாகாண சபையை நிர்வகிக்கிறது
2008 இல் 5 ஆயிரம் புலிகள் பலி பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு
5 தமிழ் இளைஞர்கள் சப்புகஸ்கந்தவில் கைது
கிழக்கு மாகாண சபை அமர்வு நாளை மீண்டும் ஆரம்பம்
முகமாலை முன்னரங்குகள் மீது புலிகள் வலிந்த தாக்குதலை நடத்த வேண்டும்
விமானநிலைய தீர்வையற்ற கடைகளில் மின் உபகரண கொள்வனவுக்கு கட்டுப்பாடு
அம்பாறையில் 2 படையினர் பலி
கொழும்பில் நடக்கவுள்ள சார்க் மாநாட்டை ஒரு போதும் நாம் சீர்குலைக்கமாட்டோம்
தனது உயிருக்கு ஆபத்தேற்பட்டால் அரசே பொறுப்பென்கிறார் ஜானகபெரேரா
சார்க் மாநாட்டை முன்னிட்ட கட்டுப்பாடுகளால் உல்லாச ஹோட்டல்களுக்கு வருமானம் இழப்பு
கொள்ளையில் ஈடுபட்ட இரு பொலிஸார் கைது
காரைதீவு கடலில் மூழ்கிய இரு மாணவர்களது சடலங்கள் நேற்றுக்காலை கரையொதுங்கின
4 சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்
தந்தையின் குற்றத்தால் மகள் தீ மூட்டி தற்கொலை
"மகிந்த ராஜபக்ஷ இருக்கும்வரை ஐக்கிய தேசிய கட்சியால் எந்தவகையிலும் வெற்றிபெற முடியாது'
ஜனாதிபதிக்கு வால்பிடிப்பவர்களே சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நியமனமென ஐ.தே.க. விசனம்
தெற்காசிய மக்கள் மாநாடு 2008 இல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
நுளம்பால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த மருந்தூட்டப்பட்ட வலைகள் விநியோகம்
யாழ். குடாநாட்டு மக்களின் சமூக வாழ்வோடு அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்திற்கு நீண்ட தொடர்புண்டு
அட்டன் சிரேஷ்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீதி சோதனை நடவடிக்கைகள் தீவிரம்
யாழ். மாவட்டத்தில் வாக்காளர் இடாப்புகள் திருத்தும் பணிகள் 23 ஆம் திகதி ஆரம்பம்
குடாநாட்டில் சி.டி.எம்.ஏ. தொலைபேசி பாவனையாளர்கள் பொலிஸ் அனுமதியைப் பெற்றால் மட்டுமே மீள இணைப்பு
அடுத்த 10 வருடங்களுக்கு ஐ.தே.க. அதிகாரத்துக்கு வரமுடியாது
நல்லூர் கந்தன் வருடாந்த மகோற்சவம் அனைத்து சேவைகளுக்கும் ஏற்பாடு
"பதவிக்கும் கோடிப்பணத்திற்குமாக வாக்களித்த மக்களை கைவிட்டு கட்சிமாறுபவனல்ல நான்'
சகல இன மக்களுக்குரிய உரிமைகள் வழங்கப்படாமையே ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைக்கு காரணம்
ஒவ்வொருவரும் தத்தமது குடும்ப வருமானத்தை உயர்த்த வழி காண்பதே இன்றைய உடனடித் தேவை
யுத்தம் நடைபெறும் நாட்டில் வாழ்க்கைச் செலவும் நெருக்கடிகளும் இருக்கும் என்கிறார் அமைச்சர் டலஸ்
அன்னை, சுவாமி ஆகியோரின் மறைவு அநுராதபுர இந்துக்களுக்கு பேரிழப்பாகும்
இலங்கை வீரர்களுக்கு டெஸ்ட் தொடரில் இஷாந்த் சர்மா கடும் நெருக்கடி கொடுப்பார்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com