Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, July 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அடுத்த 10 வருடங்களுக்கு ஐ.தே.க. அதிகாரத்துக்கு வரமுடியாது
[21 - July - 2008] [Font Size - A - A - A]
* எம்.ஏ.எம்.நிலாம்

ஐக்கிய தேசியக் கட்சி அடுத்த பத்து வருடங்களுக்கு அதிகாரத்துக்கு வரமுடியாதென ஆரூடம் கூறியிருக்கும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, ஆட்சியைக் கவிழ்க்கும் ஐ.தே.க., ஜே.வி.பி.யின் கனவு ஒருபோதும் பலிக்கப்போவதில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் யாப்பா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;

இது ஜூலை மாதமாகும். எமது நாட்டைப் பொறுத்தமட்டில் நாம் இரண்டு கறுப்பு ஜூலைகளைச் சந்தித்திருக்கின்றோம். முதலாவது 1980இலும் அடுத்தது 1983இலும் ஆகும். கறுப்பு ஜூலைக்கு 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

கறுப்பு ஜூலைகளுக்கு காரணமாக இருந்த இரண்டு கட்சிகள் இன்று மக்கள் துயர் நீக்கும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளன. எதிரணியிலிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. இரண்டு கட்சிகளுக்கும் மக்கள் துயர் பற்றிப் பேசுவதற்கு தகுதியே கிடையாது.

வடமத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளுக்கான தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி.யும் மக்களை ஏமாற்றும் பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ளன. மக்கள் அரசாங்கத்தின் மீது பூரண நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். இந்தத் தேர்தலிலும் மக்களின் ஆணை அரசுக்கே கிடைக்கும்.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம், அம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகம், யாழ். குடாநாட்டுக்கான ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் என்பன ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் வடக்கு, கிழக்கு உட்பட முழு நாட்டிலும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதனை வரவேற்று ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. ஆதரவாளர்கள் பெருந்தொகையினர் அரசுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர் எனவும் அமைச்சர் யாப்பா தெரிவித்தார்.ஊடகத்துறை அமைச்சர் தெரிவிப்பு

Email this page Your Opinion Print this page
சார்க் உச்சிமாநாட்டை இடையூறின்றி நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி
காரைதீவில் நள்ளிரவு குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
வத்தளை வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி
இலுப்பைக்கடவை படையினர் வசம்
தொலைக்காட்சிப் பெட்டி வீழ்ந்து குழந்தை மரணம்
"சார்க்' மாநாட்டு பாதுகாப்பு நடவடிக்கையால் 10 ஆயிரம் கூலித்தொழிலாளர்கள் வேலை இழப்பு
முழங்காவிலில் முப்படையும் தாக்குதல் 10 பேர் படுகாயம்; மக்கள் தப்பியோட்டம்
400 ஊழியரை பணியிலிருந்து நிறுத்த ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் திட்டம்
கிழக்கில் ஜனநாயகம் நிலவுவதாக அரசு கூறுகிறது ஆனால் ஆயுதக் குழுவே மாகாண சபையை நிர்வகிக்கிறது
2008 இல் 5 ஆயிரம் புலிகள் பலி பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு
5 தமிழ் இளைஞர்கள் சப்புகஸ்கந்தவில் கைது
கிழக்கு மாகாண சபை அமர்வு நாளை மீண்டும் ஆரம்பம்
முகமாலை முன்னரங்குகள் மீது புலிகள் வலிந்த தாக்குதலை நடத்த வேண்டும்
விமானநிலைய தீர்வையற்ற கடைகளில் மின் உபகரண கொள்வனவுக்கு கட்டுப்பாடு
அம்பாறையில் 2 படையினர் பலி
கொழும்பில் நடக்கவுள்ள சார்க் மாநாட்டை ஒரு போதும் நாம் சீர்குலைக்கமாட்டோம்
தனது உயிருக்கு ஆபத்தேற்பட்டால் அரசே பொறுப்பென்கிறார் ஜானகபெரேரா
சார்க் மாநாட்டை முன்னிட்ட கட்டுப்பாடுகளால் உல்லாச ஹோட்டல்களுக்கு வருமானம் இழப்பு
கொள்ளையில் ஈடுபட்ட இரு பொலிஸார் கைது
காரைதீவு கடலில் மூழ்கிய இரு மாணவர்களது சடலங்கள் நேற்றுக்காலை கரையொதுங்கின
4 சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்
தந்தையின் குற்றத்தால் மகள் தீ மூட்டி தற்கொலை
"மகிந்த ராஜபக்ஷ இருக்கும்வரை ஐக்கிய தேசிய கட்சியால் எந்தவகையிலும் வெற்றிபெற முடியாது'
ஜனாதிபதிக்கு வால்பிடிப்பவர்களே சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நியமனமென ஐ.தே.க. விசனம்
தெற்காசிய மக்கள் மாநாடு 2008 இல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
நுளம்பால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த மருந்தூட்டப்பட்ட வலைகள் விநியோகம்
யாழ். குடாநாட்டு மக்களின் சமூக வாழ்வோடு அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்திற்கு நீண்ட தொடர்புண்டு
அட்டன் சிரேஷ்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீதி சோதனை நடவடிக்கைகள் தீவிரம்
யாழ். மாவட்டத்தில் வாக்காளர் இடாப்புகள் திருத்தும் பணிகள் 23 ஆம் திகதி ஆரம்பம்
குடாநாட்டில் சி.டி.எம்.ஏ. தொலைபேசி பாவனையாளர்கள் பொலிஸ் அனுமதியைப் பெற்றால் மட்டுமே மீள இணைப்பு
அடுத்த 10 வருடங்களுக்கு ஐ.தே.க. அதிகாரத்துக்கு வரமுடியாது
நல்லூர் கந்தன் வருடாந்த மகோற்சவம் அனைத்து சேவைகளுக்கும் ஏற்பாடு
"பதவிக்கும் கோடிப்பணத்திற்குமாக வாக்களித்த மக்களை கைவிட்டு கட்சிமாறுபவனல்ல நான்'
சகல இன மக்களுக்குரிய உரிமைகள் வழங்கப்படாமையே ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைக்கு காரணம்
ஒவ்வொருவரும் தத்தமது குடும்ப வருமானத்தை உயர்த்த வழி காண்பதே இன்றைய உடனடித் தேவை
யுத்தம் நடைபெறும் நாட்டில் வாழ்க்கைச் செலவும் நெருக்கடிகளும் இருக்கும் என்கிறார் அமைச்சர் டலஸ்
அன்னை, சுவாமி ஆகியோரின் மறைவு அநுராதபுர இந்துக்களுக்கு பேரிழப்பாகும்
இலங்கை வீரர்களுக்கு டெஸ்ட் தொடரில் இஷாந்த் சர்மா கடும் நெருக்கடி கொடுப்பார்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com