யாழ். மாவட்டத்தில் சி.டி.எம்.ஏ. தொலைபேசி பாவனையாளர்கள் அதற்கென பொலிஸ் அனுமதிப்பத்திரம் பெற வேண்டுமென பாதுகாப்புத் தரப்பு அறிவித்துள்ளது.
யாழ். மாவட்டத்தில் இவ்வருட முற்பகுதியில் 7,000 சி.டி.எம்.ஏ. தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டபோதும் கடந்த ஒன்றரை மாதமாக இந்த இணைப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இவை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் சி.டி.எம்.ஏ. இணைப்பை மீளப்பெறுவதாயின் சம்பந்தப்பட்டவர்கள் தத்தமது பகுதி பொலிஸ் நிலையங்களிலிருந்து அனுமதிப்பத்திரம் பெறவேண்டுமென படைத்தரப்பு அறிவித்துள்ளது.
சி.டி.எம்.ஏ. தொலைபேசிப் பாவனையாளர்கள் இதற்கான விண்ணப்பப்படிவங்களை யாழ். ரெலிகொம் நிறுவனத்தில் பெற்று கிராம சேவையாளர், பிரதேச செயலரின் அங்கீகாரத்துடன் பொலிஸாரின் சிபார்சு கடிதத்தை பெற்று சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் பாவனைக்கு வழங்கப்பட்டுள்குடாநாட்டில் சி.டி.எம்.ஏ. தொலைபேசி பாவனையாளர்கள் பொலிஸ் அனுமதியைப் பெற்றால் மட்டுமே மீள இணைப்பு
யாழ். மாவட்டத்தில் சி.டி.எம்.ஏ. தொலைபேசி பாவனையாளர்கள் அதற்கென பொலிஸ் அனுமதிப்பத்திரம் பெற வேண்டுமென பாதுகாப்புத் தரப்பு அறிவித்துள்ளது.
யாழ். மாவட்டத்தில் இவ்வருட முற்பகுதியில் 7,000 சி.டி.எம்.ஏ. தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டபோதும் கடந்த ஒன்றரை மாதமாக இந்த இணைப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இவை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் சி.டி.எம்.ஏ. இணைப்பை மீளப்பெறுவதாயின் சம்பந்தப்பட்டவர்கள் தத்தமது பகுதி பொலிஸ் நிலையங்களிலிருந்து அனுமதிப்பத்திரம் பெறவேண்டுமென படைத்தரப்பு அறிவித்துள்ளது.
சி.டி.எம்.ஏ. தொலைபேசிப் பாவனையாளர்கள் இதற்கான விண்ணப்பப்படிவங்களை யாழ். ரெலிகொம் நிறுவனத்தில் பெற்று கிராம சேவையாளர், பிரதேச செயலரின் அங்கீகாரத்துடன் பொலிஸாரின் சிபார்சு கடிதத்தை பெற்று சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ள ஏழாயிரம் சி.டி.எம்.ஏ. தொலைபேசி இணைப்புகளின் செயல்பாடு இடை நிறுத்தப்பட்டிருப்பதால் அதற்குரியவர்களின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இணைப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அரச திணைக்களங்கள், நீதிமன்றங்கள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு வழங்கப்பட்ட சி.டி.எம்.ஏ. தொலைபேசி இணைப்புகள் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.ள ஏழாயிரம் சி.டி.எம்.ஏ. தொலைபேசி இணைப்புகளின் செயல்பாடு இடை நிறுத்தப்பட்டிருப்பதால் அதற்குரியவர்களின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இணைப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அரச திணைக்களங்கள், நீதிமன்றங்கள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு வழங்கப்பட்ட சி.டி.எம்.ஏ. தொலைபேசி இணைப்புகள் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.