யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களம் வாக்காளர் இடாப்புகள் திருத்தும் பணிகளை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
வாக்காளர் இடாப்புகளில 2008.06.31 ஆம் திகதி 18 வயதை அடைந்த ஒவ்வொருவரும் வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்து கொள்ள முடியுமென்பதால் அதற்கான விண்ணப்பப்படிவத்தை அவ்வப்பகுதி கிராம சேவையாளர் மூலம் சமர்ப்பித்தால் வாக்காளர் இடாபில் சேர்த்துக் கொள்ளப்படுவரெனவும் அறிவித்துள்ளது.
தமது பெயர்கள் வாக்காளர் இடாபில் இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்த தேர்தல் திணைக்களம், பிரதேச செயலகம் சகல உள்ளூராட்சி சபை அலுவலகங்களிலும் வாக்காளர் இடாப்புகளை பார்வையிட முடியுமெனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இறந்தோர் வெளிநாட்டில் குடியுரிமை பெற்றோரது பெயர்களை வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கவும் அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென தெரிவித்துள்ளனர். இனிவரும் காலத்தில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் இடாபில் பெயர் இருந்தால் தான் முடியுமென்பதால் சகலரும் வாக்காளர் இடாபில் பெயர்களைப்பதிவு செய்யுமாறு அதிகாரிகள் வேண்டியுள்ளனர்.