அட்டன் சிரேஷ்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அட்டன், பொகவந்தலாவை, நோர்வூட்,மஸ்கெலியா, நல்லதண்ணி, நோட்டன், கினிகத்தேனை ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் முக்கியமான பகுதிகளில் வீதிச்சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அட்டன் நகரிலிருந்து கினிகத்தேனை வழியாக கொழும்பு நோக்கி செல்லும் வாகனங்கள் கலுகல பொலிஸ் சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டு வாகனங்களும் பயணிகளின் ஆளடையாளங்களும் பரிசோதிக்கப்படுகின்றன.
அதே வேளை அட்டன்,கொழும்பு போன்ற பகுதிகளிலிருந்து கினிகத்தேனை வழியாக நாவலப்பிட்டி நோக்கி செல்லும் சகல வாகனங்களும் பகதுலுவ பொலிஸ் சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டு வாகனங்களும் பயணிகளின் ஆளடையாளங்களும் பரிசேதிக்கப்படுகின்றன.
இதேவேளை கினிகத்தேனை நகரூடாக அட்டன் நோக்கி வருகின்ற வாகனங்கள் தியகல பொலிஸ் சோதனை சாவடியிலும் தலவாக்கலை பகுதியிலிருந்து அட்டன் நோக்கி வருகின்ற வாகனங்கள் மல்லியப்பூ சந்தியிலுள்ள பொலிஸ் சோதனை சாவடியிலும் நிறுத்தப்பட்டு மேற்படி சோதனைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.