Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, July 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஜனாதிபதிக்கு வால்பிடிப்பவர்களே சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நியமனமென ஐ.தே.க. விசனம்
[21 - July - 2008] [Font Size - A - A - A]
* ஐ.தே.க. குற்றச்சாட்டு

-எம்.ஏ.எம்.நிலாம்-

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு ஜனாதிபதிக்கு வால்பிடிப்பவர்களே நியமிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தியிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஓய்வுபெற்ற பின்னரும் அரசினால் வாழ்ந்துகொண்டிருக்கும் பிரகிருதிகள் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நியமிக்கப்பட்டிருப்பதால் அந்த ஆணைக்குழுக்களால் நாட்டுக்கு எந்தச் சேவையும் இடம்பெறுவதில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல அரசு மீதான மேற்கண்ட குற்றச்சாட்டைச் சுமத்தினார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;

இன்று சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு செயற்படுவதாகத் தெரியவில்லை. அது ஜனாதிபதியினதும் சுதந்திரக் கட்சியினதும் வால்பிடிப்போரின் கூடாரமாக மாறியுள்ளது. இக்குற்றச்சாட்டை சுமத்த நான் பயப்படவில்லை. பொலிஸாரின் செயற்பாடுகள் நேர்மையானதாகத் தெரியவில்லை.

அரசியல் தீர்மானங்களின் நிகழ்ச்சி நிரலின்படி செயற்படும் பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகின்றோம். மகிந்த ராஜபக்ஷ அரசு என்ன விளையாட்டுக் காட்டினாலும் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமாகும்போது பொதுத்தேர்தல் நடத்தப்பட்டே ஆக வேண்டும். அதற்கப்பால் இந்த அரசு செயற்படமுடியாது. ஆட்சி மாற்றத்துக்கான தேர்தலின்போது இந்த விளையாட்டுகளுக்கு இடம்கிட்டாது. இந்த நாட்டின் அடுத்த அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சி அரசே ஆகும். 2010 வரை எந்தத் திருகுதாளத்தையும் செய்யுங்கள் உங்களைப் பற்றிய விரிவான அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் எமது ஆட்சியில் அவர்களுக்குரிய தீர்ப்பை நாம் வழங்க பின்னிற்கமாட்டோம்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு பொலிஸாரின் உதவி தேவைப்படாது. ஆனால், அனைத்து பொலிஸாரிடமும் நாம் கேட்பது நீதியாகவும் நேர்மையாகவும் செயற்படுங்கள் தவறினால் அதன் பிரதிபலன்களை நீங்கள் அனுபவித்தே ஆக நேரிடலாம்.

இந்த நாட்டுக்கும் அரசியல் தலைவர்களுக்குமாக வாழ்வின் பெரும் பகுதியை தியாகம் செய்த மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவுக்கு கலாவௌ பகுதியில் பெரிய தோட்டங்கள் கிடையாது. அவர் தமது தேர்தல் செயற்பாடுகளுக்காக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார். அந்த வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்த நபரைப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பின்னரும் கூட வீட்டுரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அதிசயம், என்னவென்றால் முறைப்பாட்டாளர் குற்றவாளியாகக் காட்டப்பட்டிருப்பதுதான்.

நாம் தயாரிக்கும் பட்டியலில் அநுராதபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி முதலிடத்தைப் பெற்றுள்ளார். ஜானக பெரேராவுக்கு ஆதரவான சகலரையும் கைது செய்ய அவர் உத்தரவிட்டிருக்கின்றார். விரைவில் மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள். அப்போது நாமும் சில தீர்ப்புகளை வழங்க நேரிடலாம்.

முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்காவுக்கு முப்படையின் பொலிஸாரின் 100 பேர் கொண்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவுக்கு ஒரு பாதுகாப்பு அதிகாரி கூட வழங்கப்படவில்லை.

ஜனாக பெரேராவின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது. அவருக்கு ஏதாவது நடந்தால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசே ஏற்கவேண்டி வரும். ஜனாதிபதியும் பாதுகாப்புக்குப் பொறுப்பான ராஜபக்ஷ சகோதரர்களும் பதிலளிக்க நேரிடும் என்பதை வலியுறுத்திக் கூறி வைக்கின்றோம்.

Email this page Your Opinion Print this page
சார்க் உச்சிமாநாட்டை இடையூறின்றி நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி
காரைதீவில் நள்ளிரவு குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
வத்தளை வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி
இலுப்பைக்கடவை படையினர் வசம்
தொலைக்காட்சிப் பெட்டி வீழ்ந்து குழந்தை மரணம்
"சார்க்' மாநாட்டு பாதுகாப்பு நடவடிக்கையால் 10 ஆயிரம் கூலித்தொழிலாளர்கள் வேலை இழப்பு
முழங்காவிலில் முப்படையும் தாக்குதல் 10 பேர் படுகாயம்; மக்கள் தப்பியோட்டம்
400 ஊழியரை பணியிலிருந்து நிறுத்த ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் திட்டம்
கிழக்கில் ஜனநாயகம் நிலவுவதாக அரசு கூறுகிறது ஆனால் ஆயுதக் குழுவே மாகாண சபையை நிர்வகிக்கிறது
2008 இல் 5 ஆயிரம் புலிகள் பலி பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு
5 தமிழ் இளைஞர்கள் சப்புகஸ்கந்தவில் கைது
கிழக்கு மாகாண சபை அமர்வு நாளை மீண்டும் ஆரம்பம்
முகமாலை முன்னரங்குகள் மீது புலிகள் வலிந்த தாக்குதலை நடத்த வேண்டும்
விமானநிலைய தீர்வையற்ற கடைகளில் மின் உபகரண கொள்வனவுக்கு கட்டுப்பாடு
அம்பாறையில் 2 படையினர் பலி
கொழும்பில் நடக்கவுள்ள சார்க் மாநாட்டை ஒரு போதும் நாம் சீர்குலைக்கமாட்டோம்
தனது உயிருக்கு ஆபத்தேற்பட்டால் அரசே பொறுப்பென்கிறார் ஜானகபெரேரா
சார்க் மாநாட்டை முன்னிட்ட கட்டுப்பாடுகளால் உல்லாச ஹோட்டல்களுக்கு வருமானம் இழப்பு
கொள்ளையில் ஈடுபட்ட இரு பொலிஸார் கைது
காரைதீவு கடலில் மூழ்கிய இரு மாணவர்களது சடலங்கள் நேற்றுக்காலை கரையொதுங்கின
4 சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்
தந்தையின் குற்றத்தால் மகள் தீ மூட்டி தற்கொலை
"மகிந்த ராஜபக்ஷ இருக்கும்வரை ஐக்கிய தேசிய கட்சியால் எந்தவகையிலும் வெற்றிபெற முடியாது'
ஜனாதிபதிக்கு வால்பிடிப்பவர்களே சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நியமனமென ஐ.தே.க. விசனம்
தெற்காசிய மக்கள் மாநாடு 2008 இல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
நுளம்பால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த மருந்தூட்டப்பட்ட வலைகள் விநியோகம்
யாழ். குடாநாட்டு மக்களின் சமூக வாழ்வோடு அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்திற்கு நீண்ட தொடர்புண்டு
அட்டன் சிரேஷ்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீதி சோதனை நடவடிக்கைகள் தீவிரம்
யாழ். மாவட்டத்தில் வாக்காளர் இடாப்புகள் திருத்தும் பணிகள் 23 ஆம் திகதி ஆரம்பம்
குடாநாட்டில் சி.டி.எம்.ஏ. தொலைபேசி பாவனையாளர்கள் பொலிஸ் அனுமதியைப் பெற்றால் மட்டுமே மீள இணைப்பு
அடுத்த 10 வருடங்களுக்கு ஐ.தே.க. அதிகாரத்துக்கு வரமுடியாது
நல்லூர் கந்தன் வருடாந்த மகோற்சவம் அனைத்து சேவைகளுக்கும் ஏற்பாடு
"பதவிக்கும் கோடிப்பணத்திற்குமாக வாக்களித்த மக்களை கைவிட்டு கட்சிமாறுபவனல்ல நான்'
சகல இன மக்களுக்குரிய உரிமைகள் வழங்கப்படாமையே ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைக்கு காரணம்
ஒவ்வொருவரும் தத்தமது குடும்ப வருமானத்தை உயர்த்த வழி காண்பதே இன்றைய உடனடித் தேவை
யுத்தம் நடைபெறும் நாட்டில் வாழ்க்கைச் செலவும் நெருக்கடிகளும் இருக்கும் என்கிறார் அமைச்சர் டலஸ்
அன்னை, சுவாமி ஆகியோரின் மறைவு அநுராதபுர இந்துக்களுக்கு பேரிழப்பாகும்
இலங்கை வீரர்களுக்கு டெஸ்ட் தொடரில் இஷாந்த் சர்மா கடும் நெருக்கடி கொடுப்பார்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com