Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, July 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
"மகிந்த ராஜபக்ஷ இருக்கும்வரை ஐக்கிய தேசிய கட்சியால் எந்தவகையிலும் வெற்றிபெற முடியாது'
[21 - July - 2008] [Font Size - A - A - A]
* அமைச்சர் சந்திரசிறி கஜநாயக்க

மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும் வரையில் ஐக்கிய தேசியக் கட்சியால் எந்தவகையிலும் வெற்றிபெற முடியாது என அரச நிர்வாக மற்றும் உள்விவகாரத்துறை அமைச்சர் சந்திரசிறி கஜநாயக்க தெரிவித்தார்.

வடமத்திய மாகாண சபை வேட்பாளர் ஜயலத் பண்டார ஒழுங்கு செய்த தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அநுராதபுரம் ரத்னாயக்கபுர பகுதியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

ஜனாதிபதி என்னை இரத்தினபுரி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பணித்தபோதும் நான் அநுராதபுர பகுதிக்குப் போகிறேன் எனக் கூறி இப்பிரதேசத்தைப் பொறுப்பெடுத்தேன். அநுராதபுர பகுதி எனக்கு என்றும் விருப்பமான பகுதி என்பதாலேயே நான் இம்முடிவை எடுத்தேன்.

மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தேர்தலில் வெற்றிபெற்றதும் எந்த ஒரு சேவையையும் செய்யாதிருக்கும் அரசியல்வாதிகளை மீண்டும் வாக்காளர்கள் தெரிவுசெய்யக்கூடாது. சிறப்பான முறையில் சேவையாற்றக்கூடிய மக்கள் தலைவர்கள் உருவாவதையே ஜனாதிபதி தலைமையிலான எமது கட்சி விரும்புகின்றது.

ஜாதிக சவிய, மகநெகும, கமநெகும திட்டங்களின் கீழ் அநுராதபுர மாவட்டத்திலுள்ள கிராமங்கள் பல அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. கிராமங்களை அபிவிருத்தி செய்வதினூடாக நாட்டை அபிவிருத்தி செய்வதே எமது அரசின் நோக்கம். அது வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது யாராவது முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்களை பொதுமக்கள் காட்டிக் கொடுத்து தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இன்று ஐக்கிய தேசியக் கட்சி பல்வேறுவகையிலும் பின்னடைவான நிலையிலுள்ளது. கட்சியை நம்பிய பிரதேச அரசியல்வாதிகள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர். இதனால் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் பலர் நிர்க்கதியான நிலையிலுள்ளனர். இவ்வாறான பலர் எம்முடன் இணைந்து வருகின்றனர். இன்றும் விலச்சி பகுதியிலுள்ள பல நூற்றுக்கணக்கான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் எம்முடன் இணைந்து கொண்டுள்ளனர். நிர்க்கதிக்குள்ளாகியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களை நாம் நேசக்கரம் நீட்டி ஏற்றுக்கொள்கின்றோம். எந்தக் கட்சியின் ஆதரவாளர்களாயினும் அனைவரும் இந்நாட்டுப் பிரஜைகளே.

மக்கள் விடுதலை முன்னணிக்குள் நிலவும் பல்வேறு பிரச்சினைகள், பிளவுகளை மூடிமறைக்கவே அக்கட்சி வேலைநிறுத்தங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட முற்படுகின்றது. எனினும், இந்நாட்டு மக்கள் ஜே.வி.பி.யை நன்கு விளங்கிக் கொண்டுள்ளனர். எனவேதான், அவர்களால் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தமும் படுதோல்வியடைந்தது. அரசின் மீதும் ஜனாதிபதியின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வரப்படுகின்றது. வேலை செய்ய முடியாதவர்கள் இதைத்தான் செய்வார்கள். ஜனாதிபதியையும் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்மார்களையும் பற்றி மக்கள் அறிவார்கள். 24 ஆம் திகதியாகும் போது எம்மீது எவ்வளவு தூரம் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பது தெரியவரும். நாம் வடமத்திய, சப்பிரகமுவ மாகாண சபைகளில் அமோக வெற்றியீட்டுவோம் என்றார்.

Email this page Your Opinion Print this page
சார்க் உச்சிமாநாட்டை இடையூறின்றி நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி
காரைதீவில் நள்ளிரவு குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
வத்தளை வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி
இலுப்பைக்கடவை படையினர் வசம்
தொலைக்காட்சிப் பெட்டி வீழ்ந்து குழந்தை மரணம்
"சார்க்' மாநாட்டு பாதுகாப்பு நடவடிக்கையால் 10 ஆயிரம் கூலித்தொழிலாளர்கள் வேலை இழப்பு
முழங்காவிலில் முப்படையும் தாக்குதல் 10 பேர் படுகாயம்; மக்கள் தப்பியோட்டம்
400 ஊழியரை பணியிலிருந்து நிறுத்த ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் திட்டம்
கிழக்கில் ஜனநாயகம் நிலவுவதாக அரசு கூறுகிறது ஆனால் ஆயுதக் குழுவே மாகாண சபையை நிர்வகிக்கிறது
2008 இல் 5 ஆயிரம் புலிகள் பலி பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு
5 தமிழ் இளைஞர்கள் சப்புகஸ்கந்தவில் கைது
கிழக்கு மாகாண சபை அமர்வு நாளை மீண்டும் ஆரம்பம்
முகமாலை முன்னரங்குகள் மீது புலிகள் வலிந்த தாக்குதலை நடத்த வேண்டும்
விமானநிலைய தீர்வையற்ற கடைகளில் மின் உபகரண கொள்வனவுக்கு கட்டுப்பாடு
அம்பாறையில் 2 படையினர் பலி
கொழும்பில் நடக்கவுள்ள சார்க் மாநாட்டை ஒரு போதும் நாம் சீர்குலைக்கமாட்டோம்
தனது உயிருக்கு ஆபத்தேற்பட்டால் அரசே பொறுப்பென்கிறார் ஜானகபெரேரா
சார்க் மாநாட்டை முன்னிட்ட கட்டுப்பாடுகளால் உல்லாச ஹோட்டல்களுக்கு வருமானம் இழப்பு
கொள்ளையில் ஈடுபட்ட இரு பொலிஸார் கைது
காரைதீவு கடலில் மூழ்கிய இரு மாணவர்களது சடலங்கள் நேற்றுக்காலை கரையொதுங்கின
4 சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்
தந்தையின் குற்றத்தால் மகள் தீ மூட்டி தற்கொலை
"மகிந்த ராஜபக்ஷ இருக்கும்வரை ஐக்கிய தேசிய கட்சியால் எந்தவகையிலும் வெற்றிபெற முடியாது'
ஜனாதிபதிக்கு வால்பிடிப்பவர்களே சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நியமனமென ஐ.தே.க. விசனம்
தெற்காசிய மக்கள் மாநாடு 2008 இல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
நுளம்பால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த மருந்தூட்டப்பட்ட வலைகள் விநியோகம்
யாழ். குடாநாட்டு மக்களின் சமூக வாழ்வோடு அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்திற்கு நீண்ட தொடர்புண்டு
அட்டன் சிரேஷ்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீதி சோதனை நடவடிக்கைகள் தீவிரம்
யாழ். மாவட்டத்தில் வாக்காளர் இடாப்புகள் திருத்தும் பணிகள் 23 ஆம் திகதி ஆரம்பம்
குடாநாட்டில் சி.டி.எம்.ஏ. தொலைபேசி பாவனையாளர்கள் பொலிஸ் அனுமதியைப் பெற்றால் மட்டுமே மீள இணைப்பு
அடுத்த 10 வருடங்களுக்கு ஐ.தே.க. அதிகாரத்துக்கு வரமுடியாது
நல்லூர் கந்தன் வருடாந்த மகோற்சவம் அனைத்து சேவைகளுக்கும் ஏற்பாடு
"பதவிக்கும் கோடிப்பணத்திற்குமாக வாக்களித்த மக்களை கைவிட்டு கட்சிமாறுபவனல்ல நான்'
சகல இன மக்களுக்குரிய உரிமைகள் வழங்கப்படாமையே ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைக்கு காரணம்
ஒவ்வொருவரும் தத்தமது குடும்ப வருமானத்தை உயர்த்த வழி காண்பதே இன்றைய உடனடித் தேவை
யுத்தம் நடைபெறும் நாட்டில் வாழ்க்கைச் செலவும் நெருக்கடிகளும் இருக்கும் என்கிறார் அமைச்சர் டலஸ்
அன்னை, சுவாமி ஆகியோரின் மறைவு அநுராதபுர இந்துக்களுக்கு பேரிழப்பாகும்
இலங்கை வீரர்களுக்கு டெஸ்ட் தொடரில் இஷாந்த் சர்மா கடும் நெருக்கடி கொடுப்பார்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com