அம்பாறை, ஒலுவில் பகுதியில் தாயும் மகளும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களில் நான்கு பேரை எதிர்வரும் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி எம்.பி.முகைதீன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் ஐந்து பேரையும் ஆஜர் செய்த போதே நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கடந்த மாதம் 20 ஆம் திகதி அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஐந்து சந்தேகநபர்களையும் அடையாள அணிவகுப்புக்குட்படுத்திய போது பாதிக்கப்பட்ட தாயும் மகளும் மேலும் இரு சாட்சிகளும் நான்கு பேரை அடையாளம் காட்டினர். அந்த நான்கு பேரே எதிர்வரும் 01 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வல்லுறவுச் சம்பவம் கடந்த மாதம் 03 ஆம் திகதி ஒலுவில் தென்னம் தோட்டத்தில் வீடொன்றில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.