கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரை கல்கிறியகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் ஒருவரைத் தேடுவதாக வீடு ஒன்றைச் சோதனையிட்ட இவர்கள் அந்த வீட்டிலிருந்து இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை கொள்ளையடித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலிடத்தில் அனுமதியைப் பெறாமல் இவர்கள் இருவரும் அந்த வீட்டில் கொள்ளையர் ஒருவரைத் தேடி வந்திருப்பதாகக் கூறி வீட்டைச் சோதனையிட்டுள்ளனர்.
கைதான இந்த சப் இன்ஸ்பெக்டர் ஒரு பட்டதாரி எனவும் அண்மையில் இடம்பெற்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சர் பதவிக்கான போட்டிப் பரீட்சைக்கும் தோற்றியிருந்தார் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கண்டி பொலிஸ் பிரிவைச் சேர்ந்த இவ்விருவரும் தற்போது வேலையில் இருந்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.