Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, July 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கொழும்பில் நடக்கவுள்ள சார்க் மாநாட்டை ஒரு போதும் நாம் சீர்குலைக்கமாட்டோம்
[21 - July - 2008] [Font Size - A - A - A]
*விடுதலைப் புலிகள் தெரிவிப்பு

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் எமது சுதந்திரப் போராட்டத்திற்கு பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பை நாம் எதிர் பார்த்து நிற்கும் வேளையில் கொழும்பில் இடம்பெறவுள்ள சார்க் மாநாட்டை குழப்பும் வேலைகளில் ஒரு போதும் ஈடுபட மாட்டோமென விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் "சண்டேலீடர்' வார இதழுக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள நடேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது;

"தென்பகுதித் தாக்குதல்களை நாம் நடத்தவில்லை. ஒரு போதும் பொது மக்களை நாம் இலக்கு வைப்பதில்லை. ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களின் மூலம் படைத்

தரப்பைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் முகவர் நிறுவனங்களும் பாரியளவு வருமானம் ஈட்டுகின்றனர். இவர்கள் போர் முடிவுக்கு வருவதை ஒரு போதும் விரும்ப மாட்டார்கள்.

இவ்வாறானவர்களே துணை இராணுவக் குழுக்களைப் பயன்படுத்தி இழி செயல்களை மேற்கொண்டு போர் தொடர்வதை உறுதிப்படுத்திக் கொள்கின்றனர். உண்மைகளை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள் மீதும் இந்த அரசு போர் தொடுத்துள்ளது.

அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்போரை அடக்குமுறைக்கு உள்ளாக்குவதற்கு ஓர் குழு இயங்கி வருகின்றது. மேர்வின் சில்வா போன்றோர் இந்தக் குழுவின் முக்கிய நபர்களாகவுள்ளனர். அரசியல் ரீதியான அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக சிங்கள மக்களைக் கொன்று குவிப்பதற்கு கூட இவர்கள் தயக்கம் காட்ட மாட்டார்கள்.

தென்பகுதியில் நாம் தாக்குதல் நடத்துவதாக எந்தவொரு ஆதாரமுமின்றி சர்வதேசம் எம் மீது எடுக்கும் தீர்மானங்கள் தொடர்பில் நாம் கவலையடைகின்றோம். ஆனால், எமது பகுதியில் அரச படையினரே தாக்குதல்களை நடத்துகின்றனர் என்பதை உறுதிப்படுத்த தேவையான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன.

சர்வதேச நாடுகள், ஊடகவியலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் இந்த ஆதாரங்களை அம்பலப்படுத்த நாம் தயாராயுள்ளோம்.

நாம் ஆயுதங்களை கீழே வைத்தால் பேச்சுக்கு தயாரென ஜனாதிபதி கூறியுள்ளார். 30 வருடங்களுக்கு முன் எம்மக்களைப் பாதுகாப்பதற்காக ஆயுதங்களை கையிலெடுத்தோம். ஜனாதிபதியின் பொறுப்புணர்ச்சியற்ற வேண்டுகோளுக்காக நாம் எமது மக்களைக் காப்பாற்றும் தலையாய கடமையிலிருந்து விடுபடுவதற்கு தயாரில்லை. நிபந்தனையற்ற சூழ்நிலையிலேயே சமாதான பேச்சுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

அரசின் சர்வ கட்சிக் குழுவின் கூட்டம் என்பது மற்றுமொரு ஏமாற்று நாடகமாகும். சர்வதேசத்தை ஏமாற்றவே அரசு இதனை முன்னெடுக்கின்றது. இந்தக் குழுவின் பரிந்துரைகளில் பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன. இந்தப் பரிந்துரைகள் தமிழர்களின் நியாயமான கோரிக்கைக்கு ஒரு போதும் தீர்வாக அமையாது.

கொழும்பில் இடம்பெறவுள்ள சார்க் மாநாட்டை குழப்புவதற்கு நாம் முயற்சிகள் மேற்கொள்வதாக கூறப்படுகிறது. நாம் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் சுதந்திர போராட்டத்திற்கு பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளோம். இவ்வாறான நிலையில் சார்க் மாநாட்டை குழப்புவதற்கு ஒரு போதும் முயற்சிக்க மாட்டோம்.'

மரபு ரீதியான போர் ஆற்றலை நாம் இழந்து விட்டதாக அரசு போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றது. கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை அரசாங்கங்கள் இவ்வாறான போலி பிரசாரங்களையே முன்னெடுத்து வந்துள்ளது. ஆனால், அனைத்துக் காலங்களிலும் நாம் எமது மரபு ரீதியான போராற்றலை வெளிப்படுத்தி வந்துள்ளோம். களநிலைமைகளுக்கு ஏற்ப நாம் மாறுபட்ட அணுகுமுறைகள் தந்திரோபாயங்களைப் பயன்படுத்துகின்றோம்.

Email this page Your Opinion Print this page
சார்க் உச்சிமாநாட்டை இடையூறின்றி நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி
காரைதீவில் நள்ளிரவு குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
வத்தளை வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி
இலுப்பைக்கடவை படையினர் வசம்
தொலைக்காட்சிப் பெட்டி வீழ்ந்து குழந்தை மரணம்
"சார்க்' மாநாட்டு பாதுகாப்பு நடவடிக்கையால் 10 ஆயிரம் கூலித்தொழிலாளர்கள் வேலை இழப்பு
முழங்காவிலில் முப்படையும் தாக்குதல் 10 பேர் படுகாயம்; மக்கள் தப்பியோட்டம்
400 ஊழியரை பணியிலிருந்து நிறுத்த ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் திட்டம்
கிழக்கில் ஜனநாயகம் நிலவுவதாக அரசு கூறுகிறது ஆனால் ஆயுதக் குழுவே மாகாண சபையை நிர்வகிக்கிறது
2008 இல் 5 ஆயிரம் புலிகள் பலி பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு
5 தமிழ் இளைஞர்கள் சப்புகஸ்கந்தவில் கைது
கிழக்கு மாகாண சபை அமர்வு நாளை மீண்டும் ஆரம்பம்
முகமாலை முன்னரங்குகள் மீது புலிகள் வலிந்த தாக்குதலை நடத்த வேண்டும்
விமானநிலைய தீர்வையற்ற கடைகளில் மின் உபகரண கொள்வனவுக்கு கட்டுப்பாடு
அம்பாறையில் 2 படையினர் பலி
கொழும்பில் நடக்கவுள்ள சார்க் மாநாட்டை ஒரு போதும் நாம் சீர்குலைக்கமாட்டோம்
தனது உயிருக்கு ஆபத்தேற்பட்டால் அரசே பொறுப்பென்கிறார் ஜானகபெரேரா
சார்க் மாநாட்டை முன்னிட்ட கட்டுப்பாடுகளால் உல்லாச ஹோட்டல்களுக்கு வருமானம் இழப்பு
கொள்ளையில் ஈடுபட்ட இரு பொலிஸார் கைது
காரைதீவு கடலில் மூழ்கிய இரு மாணவர்களது சடலங்கள் நேற்றுக்காலை கரையொதுங்கின
4 சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்
தந்தையின் குற்றத்தால் மகள் தீ மூட்டி தற்கொலை
"மகிந்த ராஜபக்ஷ இருக்கும்வரை ஐக்கிய தேசிய கட்சியால் எந்தவகையிலும் வெற்றிபெற முடியாது'
ஜனாதிபதிக்கு வால்பிடிப்பவர்களே சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நியமனமென ஐ.தே.க. விசனம்
தெற்காசிய மக்கள் மாநாடு 2008 இல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
நுளம்பால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த மருந்தூட்டப்பட்ட வலைகள் விநியோகம்
யாழ். குடாநாட்டு மக்களின் சமூக வாழ்வோடு அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்திற்கு நீண்ட தொடர்புண்டு
அட்டன் சிரேஷ்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீதி சோதனை நடவடிக்கைகள் தீவிரம்
யாழ். மாவட்டத்தில் வாக்காளர் இடாப்புகள் திருத்தும் பணிகள் 23 ஆம் திகதி ஆரம்பம்
குடாநாட்டில் சி.டி.எம்.ஏ. தொலைபேசி பாவனையாளர்கள் பொலிஸ் அனுமதியைப் பெற்றால் மட்டுமே மீள இணைப்பு
அடுத்த 10 வருடங்களுக்கு ஐ.தே.க. அதிகாரத்துக்கு வரமுடியாது
நல்லூர் கந்தன் வருடாந்த மகோற்சவம் அனைத்து சேவைகளுக்கும் ஏற்பாடு
"பதவிக்கும் கோடிப்பணத்திற்குமாக வாக்களித்த மக்களை கைவிட்டு கட்சிமாறுபவனல்ல நான்'
சகல இன மக்களுக்குரிய உரிமைகள் வழங்கப்படாமையே ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைக்கு காரணம்
ஒவ்வொருவரும் தத்தமது குடும்ப வருமானத்தை உயர்த்த வழி காண்பதே இன்றைய உடனடித் தேவை
யுத்தம் நடைபெறும் நாட்டில் வாழ்க்கைச் செலவும் நெருக்கடிகளும் இருக்கும் என்கிறார் அமைச்சர் டலஸ்
அன்னை, சுவாமி ஆகியோரின் மறைவு அநுராதபுர இந்துக்களுக்கு பேரிழப்பாகும்
இலங்கை வீரர்களுக்கு டெஸ்ட் தொடரில் இஷாந்த் சர்மா கடும் நெருக்கடி கொடுப்பார்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com