அம்பாறை வம்மியடிக்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தாங்கள் நடத்திய தாக்குதலில் இரு விஷேட அதிரடிப் படையினர் கொல்லப்பட்டதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
வம்மியடிக்குளம் பகுதியில் நேற்றுக் காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரு படையினர் கொல்லப்பட்டதாகவும் பின்னர் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் இருவர் படுகாயமடைந்ததாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
வம்மியடிக்குளம் பகுதியில் முகாம் அமைத்துக் கொண்டிருந்த அதிரடிப் படையினர் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் புலிகள் தெரிவித்தனர். இதையடுத்து அந்தப் பகுதியில் அதிரடிப் படையினர் நீண்ட நேரம் தேடுதலை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.