பதுளை வெஸ்ட்மோலேண்ட் தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் சப்புகஸ்கந்த பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெஸ்ட்மோலேண்ட் தோட்டத்தைச் சேர்ந்த சந்தனம் என்டன்ராஜ் (வயது 28), பெரியசாமி பாலகுமார் (வயது 23), இரட்ணசாமி சசிகுமார் (வயது 22), ஆறுமுகம் சிவபாலன் (வயது 20), கணபதி சந்திரகுமார் (வயது 22) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலிகளுடன் தொடர்புடையவர்களென சந்தேகத்தின் பேரிலேயே இவர்களை கைது செய்திருப்பதாக சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இக்கைதுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர் ஊவா மாகாண சபை உறுப்பினர் அ.அரவிந்குமாரின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.