Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, July 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
400 ஊழியரை பணியிலிருந்து நிறுத்த ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் திட்டம்
[21 - July - 2008] [Font Size - A - A - A]
* இழப்பீடு வழங்க 40 கோடி தேவையென தெரிவிப்பு

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மேலதிகமாக உள்ள ஊழியர்கள் 400 பேரை அவர்களுக்கு இழப்பீடு வழங்கி பணியிலிருந்து நிறுத்தவுள்ளதாக அந்நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10 வருடங்களுக்கு மேலான காலப் பகுதியில் பணியாற்றியவர்களும் 52 வயதுக்கு குறைவானவர்களும் கூட தன்னிச்சையாக ஓய்வுபெறும் திட்டத்தின் கீழ் ஓய்வுபெற விண்ணப்பிக்க முடியுமென்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவர் ஹட்சன் சமரசிங்க' லங்கா பிஸ்னஸ் ஒன்லைனு' க்கு தெரிவித்துள்ளார்.

400 பேரும் ஓய்வுபெற விரும்பினால் அவர்களுக்கு இழப்பீட்டு நிதியை வழங்க கூட்டுத்தாபனத்துக்கு 40 கோடி ரூபா தேவைப்படுமெனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இத்திட்டத்திற்கு திறைசேரி நிதி வழங்குமென எதிர்பார்க்கப்படுவதாக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனப் பணிப்பாளர் சமந்த வெலி வீரிய தெரிவித்திருக்கிறார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு தற்போது மாதாந்தம் ஊதியக் கொடுப்பனவுச் செலவினமாக 2 கோடி 40 இலட்சம் செலவிடப்படுவதாகவும் மேலதிக ஊழியர்களை நிறுத்தினால் 1 கோடி 50 இலட்சம் ரூபாவை இலாபமாக பெற முடியுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 1,068 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். போக்குவரத்து, பாதுகாப்பு பிரிவுகளிலேயே மேலதிகமாக ஊழியர்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் அநேகமான அரச நிறுவனங்களில் மேலதிகமாக ஊழியர்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. தமது ஆதரவாளர்களை அரசியல்வாதிகள் அரச நிறுவனங்களில் நியமனங்களை வழங்கி நிரப்புவது தசாப்தங்களாக தொடர்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

அண்மைய வருடங்களில் சுமார் 3 இலட்சம் பேர் அரசதுறைக்கு திரட்டப்பட்டிருப்பதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

2007 இல் வரி மூலமான வருவாயின் ஒவ்வொரு ரூபாவினதும் 55 சதம் அரசதுறையின் சம்பளங்கள், ஓய்வூதியங்களுக்கு செலவிடப்படுகின்றது.

Email this page Your Opinion Print this page
சார்க் உச்சிமாநாட்டை இடையூறின்றி நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி
காரைதீவில் நள்ளிரவு குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
வத்தளை வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி
இலுப்பைக்கடவை படையினர் வசம்
தொலைக்காட்சிப் பெட்டி வீழ்ந்து குழந்தை மரணம்
"சார்க்' மாநாட்டு பாதுகாப்பு நடவடிக்கையால் 10 ஆயிரம் கூலித்தொழிலாளர்கள் வேலை இழப்பு
முழங்காவிலில் முப்படையும் தாக்குதல் 10 பேர் படுகாயம்; மக்கள் தப்பியோட்டம்
400 ஊழியரை பணியிலிருந்து நிறுத்த ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் திட்டம்
கிழக்கில் ஜனநாயகம் நிலவுவதாக அரசு கூறுகிறது ஆனால் ஆயுதக் குழுவே மாகாண சபையை நிர்வகிக்கிறது
2008 இல் 5 ஆயிரம் புலிகள் பலி பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு
5 தமிழ் இளைஞர்கள் சப்புகஸ்கந்தவில் கைது
கிழக்கு மாகாண சபை அமர்வு நாளை மீண்டும் ஆரம்பம்
முகமாலை முன்னரங்குகள் மீது புலிகள் வலிந்த தாக்குதலை நடத்த வேண்டும்
விமானநிலைய தீர்வையற்ற கடைகளில் மின் உபகரண கொள்வனவுக்கு கட்டுப்பாடு
அம்பாறையில் 2 படையினர் பலி
கொழும்பில் நடக்கவுள்ள சார்க் மாநாட்டை ஒரு போதும் நாம் சீர்குலைக்கமாட்டோம்
தனது உயிருக்கு ஆபத்தேற்பட்டால் அரசே பொறுப்பென்கிறார் ஜானகபெரேரா
சார்க் மாநாட்டை முன்னிட்ட கட்டுப்பாடுகளால் உல்லாச ஹோட்டல்களுக்கு வருமானம் இழப்பு
கொள்ளையில் ஈடுபட்ட இரு பொலிஸார் கைது
காரைதீவு கடலில் மூழ்கிய இரு மாணவர்களது சடலங்கள் நேற்றுக்காலை கரையொதுங்கின
4 சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்
தந்தையின் குற்றத்தால் மகள் தீ மூட்டி தற்கொலை
"மகிந்த ராஜபக்ஷ இருக்கும்வரை ஐக்கிய தேசிய கட்சியால் எந்தவகையிலும் வெற்றிபெற முடியாது'
ஜனாதிபதிக்கு வால்பிடிப்பவர்களே சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நியமனமென ஐ.தே.க. விசனம்
தெற்காசிய மக்கள் மாநாடு 2008 இல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
நுளம்பால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த மருந்தூட்டப்பட்ட வலைகள் விநியோகம்
யாழ். குடாநாட்டு மக்களின் சமூக வாழ்வோடு அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்திற்கு நீண்ட தொடர்புண்டு
அட்டன் சிரேஷ்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீதி சோதனை நடவடிக்கைகள் தீவிரம்
யாழ். மாவட்டத்தில் வாக்காளர் இடாப்புகள் திருத்தும் பணிகள் 23 ஆம் திகதி ஆரம்பம்
குடாநாட்டில் சி.டி.எம்.ஏ. தொலைபேசி பாவனையாளர்கள் பொலிஸ் அனுமதியைப் பெற்றால் மட்டுமே மீள இணைப்பு
அடுத்த 10 வருடங்களுக்கு ஐ.தே.க. அதிகாரத்துக்கு வரமுடியாது
நல்லூர் கந்தன் வருடாந்த மகோற்சவம் அனைத்து சேவைகளுக்கும் ஏற்பாடு
"பதவிக்கும் கோடிப்பணத்திற்குமாக வாக்களித்த மக்களை கைவிட்டு கட்சிமாறுபவனல்ல நான்'
சகல இன மக்களுக்குரிய உரிமைகள் வழங்கப்படாமையே ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைக்கு காரணம்
ஒவ்வொருவரும் தத்தமது குடும்ப வருமானத்தை உயர்த்த வழி காண்பதே இன்றைய உடனடித் தேவை
யுத்தம் நடைபெறும் நாட்டில் வாழ்க்கைச் செலவும் நெருக்கடிகளும் இருக்கும் என்கிறார் அமைச்சர் டலஸ்
அன்னை, சுவாமி ஆகியோரின் மறைவு அநுராதபுர இந்துக்களுக்கு பேரிழப்பாகும்
இலங்கை வீரர்களுக்கு டெஸ்ட் தொடரில் இஷாந்த் சர்மா கடும் நெருக்கடி கொடுப்பார்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com