காரைதீவு நாவலடி பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நள்ளிரவு குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை நள்ளிரவு வெளியே சென்றுவிட்டு தாய்வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே வீட்டு வாசலில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
தலையிலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்த நிலையில் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ள?ர்.
காரைதீவு7 விஷ்ணு வித்தியாலய வீதியைச் சேர்ந்த சிவா என்றழைக்கப்படும் சுந்தரம் கதிரேசன் (30 வயது) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே கொல்லப்பட்டவராவார்.
இச்சம்பவம் தொடர்பாக மரண விசாரணையை மேற்கொண்ட கல்முனை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.பதூர்த்தீன் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டதை அடுத்து பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.