நியூஸிலாந்து அணியின் பயிற்சியாளராக முன்னாள் கப்டன் ஜோன் ரைட் நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.
நியூஸிலாந்து அணியின் பயிற்சியாளர் ஜோன் பிரேஸ்வெல்லின் பயிற்சிக் காலம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து இப்பகுதிக்கு நியூஸிலாந்து அணியின் முன்னாள் கப்டன் ஜோன் ரைட்டின் பெயர் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்திய அணிக்கு 2000 முதல் 2005 வரை சிறப்பாக பயிற்சியளித்த இவர் நியூஸிலாந்து அணியின் தரத்தை உயர்த்துவார் என்கிறார் நியூஸிலாந்து கிரிக்கெட் தலைமை நிர்வாகி ஜஸ்ரின் வான். இது குறித்து அவர் கூறுகையில்;
""நியூஸிலாந்து அணியின் இளம் வீரர்களை, சர்வதேச வீரர்களாக மாற்றியவர் அவர்தான். அவர் பயிற்சியாளராக வருவது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.