Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, July 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
ஸ்டான் போர்ட் டெனிஸ் போட்டி அரையிறுதிக்கு செரீனா தகுதி
[21 - July - 2008] [Font Size - A - A - A]
ஸ்டான்போர்ட் டெனிஸ் போட்டியின் அரையிறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார்.

"பாங்க் ஒவ் தி வெஸ்ட் டெனிஸ்' போட்டி கலிபோர்னியாவில் ஸ்டான்போர்ட் நகரில் நடைபெற்று வருகிறது.

வெள்ளிக்கிழமை இரவு நடந்த காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 5 ஆவது இடத்தில் உள்ள சுவிற்சர்லாந்தின் பட்டி ஸ்க்னைடருடன் மோதினார் செரீனா. இப்போட்டியில் 63, 61 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார் செரீனா.

7.2 கோடி ரூபா பரிசுத் தொகை கொண்ட இப்போட்டியில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் அவர். அரையிறுதியில் கனடாவைச் சேர்ந்த அலெக்சாண்டரா வொஸ்நியக்குடன் மோதவுள்ளார். இந்த மாத தொடக்கத்தில் விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸிடம் தோல்வியுற்ற செரீனா, ஸ்டான்போர்ட் போட்டியில் எப்படியாவது பட்டம் வெல்லவேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்.

மற்றொரு காலிறுதிப் போட்டியில், ஸ்லோவாக்கியாவின் டொமினிகா சிபுல்கோவாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் ஜப்பான் வீராங்கனை சுகியாமா.

Email this page Your Opinion Print this page
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையை முழுமையாக கலைக்கவேண்டும்மியாண்டாட் கூறுகிறார்
சாம்பியன் கிண்ணத் தொடரை பாகிஸ்தானில் நடத்த ஐ.சி.சி. பச்சைகொடி?
ஆசிப்புக்கு 2 ஆவது கட்ட ஊக்கமருந்து சோதனை சுவிஸில் 28 ஆம் திகதி நடத்தப்படுகிறது
டெண்டுல்கரின் விக்கெட்டை வீழ்த்துவதே தனது கனவென்கிறார் சுழற்பந்தாளர் மென்டிஸ்
ஸ்டான் போர்ட் டெனிஸ் போட்டி அரையிறுதிக்கு செரீனா தகுதி
நியூஸிலாந்து அணியின் பயிற்சியாளராக முன்னாள் கப்டன் ஜோன் ரைட்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com