கொழும்பு தெற்கில் வசிக்கும் வாக்காளரான ஒரு தமிழ் அன்பர் ஆதங்கத்துடன் இதைத் தெரிவித்தார்.
இவர் ஒரே முகவரியில் நெடுங்காலமாக வசித்து வருகிறார். கடந்த பல தேர்தல்களில் வாக்களித்துமிருக்கிறார். தேசிய அடையாள அட்டையை வைத்திருக்கிறார்.
"வாக்காளர் இடாப்புகளை புதுப்பிப்பதற்கான படிவங்கள் இப்போது கிராம சேவையாளர்களினால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன அல்லவா? இதை நிரப்பி அதனுடன் பொலிஸ் பதிவுப் பிரதியையும் இணைத்து வையுங்கள்' என்று கிராம சேவையாளர் கூறிவிட்டுச் சென்றுள்ளாராம்.
"வாக்காளரான எனது பதிவை புதுப்பிப்பதற்கு பொலிஸ் பதிவு எதற்கு?' என்று கேட்கிறார் அந்த அன்பர்.
கிராம சேவையாளர்கள் தங்கள் இஷ்டம் போல் நிபந்தனைகளை போடலாமா? பொலிஸ் பதிவை எதற்குத்தான் கேட்கவேண்டும் என்ற நியதி இல்லையா?