Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, July 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
பாகிஸ்தான் அணு விஞ்ஞானி கானுக்கு உறவினர்களை சந்திப்பதற்கு அனுமதி
[23 - July - 2008] [Font Size - A - A - A]
அணுத் தொழில்நுட்பத்தை ஈராக்கிடம் இரகசியமாக விற்றது தொடர்பில் கைது செய்யப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கானுக்கு அவரது உறவினர்களை சந்திப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அவரது கோரிக்கையை ஏற்று கருணையின் அடிப்படையில் அவருக்கு இந்த அணுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம்.

விஞ்ஞானி கானின் சார்பில் வழக்கறிஞர் ஜவீத் இக்பால் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் கானுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி உறவினர்களைச் சந்திப்பதற்கு அனுமதியளிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்நிலையில், இந்த மனுவை கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தலைமை நீதிபதி சர்தார் முகமது அஸ்லாம், பாகிஸ்தான் எல்லைக்குள் விஞ்ஞானி கான் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், அவர் யாரை வேண்டுமானாலும் சந்தித்து பேசலாம் என்று கூறி உத்தரவிட்டார்.

அதேசமயம், அணு தொழில்நுட்பம் தொடர்பாக எவ்விதத் தகவலையும் அவர் யாருடனும் பகிர்த்துகொள்ளக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Email this page Your Opinion Print this page
ஈரானின் அணுவாயுத நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதை தடுப்பதற்கு பிரிட்டன் தீர்மானம்
சிம்பாப்வே அரசு எதிர்க் கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு இணக்கம்
சுற்றுப் பயணத்தின் இரண்டாம் கட்டமாக ஈராக்கில் பராக் ஒபாமா
நேட்டோ படையினரின் தாக்குதலில் ஆப்கானில் பொதுமக்கள் பலர் பலி
ஆங் சான் சூ கியின் விடுதலை குறித்த கருத்து தவறானது
பாகிஸ்தான் அணு விஞ்ஞானி கானுக்கு உறவினர்களை சந்திப்பதற்கு அனுமதி
பாகிஸ்தான் பழங்குடியின பகுதிகளில் 8 ஆயிரம் வெளிநாட்டு தீவிரவாதிகள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com