* ஆசியான் மாநாட்டில் தெரிவிப்பு
மியன்மார் விடுதலை இயக்கத் தலைவர் ஆங்சான் சூகி சில மாதங்களில் விடுதலையாவாரெனக் கூறப்பட்ட கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால் கூறப்பட்டதாகுமென ஆசியான் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங் சான் சூ கியின் வீட்டுக் காவலை மேலும் ஓராண்டுக்கு நீடிக்க மியான்மார் இராணுவ அரசு முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் ஜோர்ஜ் யோ "மியன்மார் சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் காலக்கெடுவின் படி சூ கி 6 மாதங்களுக்குள் விடுவிக்கப்படுவார் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் நியான் வின் கூறினார், எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால், ஆசியான் மாநாட்டில் இந்த விவாதம் எழுந்த போது நியான் வின் கூறிய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் தான் காலக்கெடு முடிவுக்கு வருகிறது எனவும் இந்தோனேஷிய வெளியுறவு அமைச்சர் ஹசன் விராஜுதா தெரிவித்தார்.