ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினரால் மேலும் பல பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மாகாணமான பராவில் தலிபான்கள் என்று நினைத்து இரவில் தவறுதலாக ஆப்கானிஸ்தான் மற்றும் வெளிநாட்டு படையினர் மீது ஆப்கானிஸ்தான் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.
பொலிஸாருக்கு உதவியாக பொதுமக்கள் சென்றுள்ளனர். வெளிநாட்டு படையினரோ தங்களுக்கு உதவியாக வான் தாக்குதலை கோரியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஏராளமான சிவிலியன்களும் நான்கு பொலிஸாரும் கொல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் நேட்டோ படைகள் வீசிய ஷெல்கள் இலக்கை தாக்காமல் முன்னரே வீழ்ந்ததில் குறைந்தது நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.